டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் இரு வண்ண கலவை அறிமுகம்

0

tvs star city plus dual tone launched110சிசி சந்தையில் விற்பனையில் டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் பைக்கில் பண்டிகை காலத்தை முன்னிட்டு இரு வண்ண கலவை பெற்ற மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தோற்றம், 3டி டிவிஎஸ் பேட்ஜ் மற்றும் கூடுதல் பாடி கிராபிக்ஸ் தவிர வேறு எவ்விதமான மாற்றங்களும் இல்லை.

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ்

விற்பனையில் உள்ள மாடலின் எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லாமல்,  8.30 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 109.7 சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 8.70 Nm ஆகும். இதில் 4 வேக கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. டிவிஎஸ் ஸ்டார்ட் சிட்டி + பைக் மைலேஜ் லிட்டருக்கு 86 கிமீ என ஆராய் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

Google News

tvs Star City Bike

தோற்ற அமைப்பில் எந்த மாற்றமும் இல்லாமல் கருப்பு நிற கிராப் ரெயில், முப்பரிமாண டிவிஎஸ் பேட்ஜ் ஆகியவற்றுடன் கருப்பு-சிவப்பு, கருப்பு-நீலம், சிவப்பு-கருப்பு ஆகிய நிறங்களுடன் கிடைக்கின்றது.

இந்த பைக்கில் முன்புற சக்கரங்களுக்கு 130மிமீ டிரம் பிரேக் மற்றும் பின்புற சக்கரங்களில் 110மிமீ டிரம் பிரேக் பெற்றிருக்கின்றது.

சாதாரண எலக்ட்ரிக் ஸ்டார்ட் மாடலை விட ரூ.1000 வரை விலை கூடுதலாகவும், கிக் ஸ்டார்ட்ர் மாடலை விட ரூ.5000 விலை கூடுதலாக அமைந்துள்ள இரு வண்ண கலவை டிவிஎஸ் ஸ்டார் சிட்டி + விலை ரூ. 50,800 (எக்ஸ்-ஷோரூம் சென்னை) ஆகும்.