டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், கார்கில் வெற்றி தினத்தை நினைவுக்கூறும் வகையில், டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் மாடலை ரூ. 54,399 விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.
பிரத்தியேக கார்கில் எடிஷன் மாடலில் புதிதாக மூன்று நிறங்கள் மட்டும் இணைக்கப்பட்டு வேறு எவ்விதமான மாற்றங்களும் வழங்கப்படவில்லை. புதிதாக நாவெல் வெள்ளை, சோலிஜர் பச்சை மற்றும் ராயல் நீலம் ஆகியவற்றை வழங்கியுள்ளது.
கடந்த ஆண்டு டிவிஎஸ் மோட்டார் செயற்படுத்தி கார்கில் வெற்றி தினம் ஜூலை 26 ந் தேதி கொண்டாடுப்படுவதனை முன்னிட்டு Kargil Calling – Ride for the Real Stars என்ற பிராசாரத்தை 3500 டிவிஎஸ் டீலர்கள் வாயிலாக மேற்கொண்டது. இந்நிலையில் ஸ்டார் சிட்டி பிளஸ் பைக்கின் அடிப்படையில் கார்கில் சிறப்பு எடிஷன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
4 ஸ்பீடு கியர்பாக்ஸ் பெற்ற 109.7cc என்ஜின் அதிகபட்சமாக 8.4 bhp பவர் மற்றும் 8.7 Nm டார்க் வழங்குகின்றது. இந்த பைக்கில் எஸ்பிஎஸ் எனப்படுகிற Synchronised Braking System பெற்று முன்பக்க டயரில் 130 மிமீ மற்றும் பின்புற டயரில் 110 மிமீ டிரம் பிரேக்கினை இந்த பைக் பெற்றதாக சந்தையில் கிடைக்க உள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து டிவிஎஸ் டீலர்களிடமும் கிடைக்க உள்ள சிறப்பு கார்கில் எடிசனில் ராணுவத்தில் பயன்படுத்துகின்ற நிறங்களை கொண்டதாக வந்துள்ளது. மற்றபடி எந்த மெக்கானிக்கல் மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை.
டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் பைக் மாடல் ரூ. 53,499 விற்பனையக டெல்லி விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.
இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள நிசான் மேக்னைட் எஸ்யூவி காரின் டர்போ வேரியண்டின் விலை அதிகபட்சமாக ரூ.30,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மற்றபடி, சாதாரண…
சிங்கிள் சேனல் ஏபிஎஸ் கொண்ட மாடலில் ரைடிங் மோட் இணைத்து விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி…
இந்தியாவில் பெரும்பாலான உதிரிபாகங்கள் தயாரிக்கப்பட்ட ஸ்கோடா ஆட்டோவின் புதிய குஷாக் எஸ்யூவி காரின் இன்டீரியர் டிசைன் படம் வெளியிடப்பட்டுள்ள நிலையில்…
இந்திய சந்தையில் முதன்முறையாக குறைந்த 110சிசி இன்ஜின் பெற்ற பைக் மாடலாக பஜாஜ் பிளாட்டினா 110 ஏபிஎஸ் விற்பனைக்கு ரூபாய்…
இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற பைக்குகளில் குறைவான விலையில் கிடைக்கின்ற பஜாஜின் பிளாட்டினா 100 ES மாடல் விலை ரூ.53,920 ஆக…
ரூ.3.18 லட்சத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள புதிய கவாஸாகி நின்ஜா 300 பைக்கில் பிஎஸ்-6 ஆதரவு பெற்ற இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. முந்தைய…