ரூ. 2000 விலை குறைந்த டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர் விபரம்

0

டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம், வீகோ ஸ்கூட்டரின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் அதிகபட்சமாக ரூ.2000 வரை டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டரின் விலையை குறைத்துள்ளது. விலை குறைப்பு ஆரம்பநிலை வேரியன்டுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது.

டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர்

சமீபத்தில் டிவிஎஸ் நிறுவனம் பிரிமியம் ரக சந்தையில் விற்பனை செயப்படுகின்ற டிவிஎஸ் அப்பாச்சி 310 பைக் மாடலை ரூ.8000 வரை அதிகபட்சமாக விலை உயர்த்திருந்த நிலையில் , பஜாஜ் ஆட்டோ நிறுவனமும் ரூ.2000 வரை தனது மோட்டார்சைக்கிள் மாடல்களை விலை உயர்த்தியிருந்தது.

8 பிஹெச்பி ஆற்றல், 8.4 என்எம் டார்கினை வெளிப்படுத்தும் 109.7சிசி எஞ்சின் ஒற்றை சிலிண்டர் பெற்றுள்ளது. முழுமையான டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கன்சோல் , பவர் மற்றும் ஈக்கோ மோட் இன்டிகேட்டரை பெற்றுள்ளது.

தொடர்ந்து சில மாதங்களாக டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டரின் விற்பனை சரிவினை சந்தித்து வரும் நிலையில், சரிவை ஈடுக்கட்டும் நோக்கில் வீகோ மாடலின் விலையை ரூ. 2000 குறைத்து தொடக்கநிலை வேரியன்டை ரூ. 50,165 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டிஸ்க் பிரேக் வேரியன்ட் ரூ.53,083 ஆகும். (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டரின் போட்டியாளர்கள் ஹீரோ பிளெஸர், சுசூகி லெட்ஸ், யமஹா ரே மற்றும் ஹோண்டா ஆக்டிவா ஐ போன்றவை ஆகும்.