டிவிஎஸ் XL 100 மொபட்டில் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

இந்திய இருசக்கர வாகன சந்தையில் பிரசத்தி பெற்று விளங்கும் மொபட் மாடலான டிவிஎஸ் XL 100 மொபட்டில் ஐ டச் ஸ்டார்ட் என்ற பெயரில் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் இணைக்கப்பட்டு ரூ. 36,109 விலையில் விற்பனைக்கு வெளியாகியுள்ள நிலையில் இதை பற்றி அறிந்து கொள்ளலாம்.

இரு சக்கர வாகன சந்தையில் பிரபலமாக விளங்குகின்ற மொபட் மாடலான டி.வி.எஸ் எக்ஸ்எல் 100, ஊரக சந்தை, பொருட்களை எடுத்துச் செல்ல என பல்வேறு பயன்பாடுகளுக்கு ஏற்ற எலக்ட்ரிக் ஸ்டார்ட் அம்சத்தை i-Touch Start என்ற பெயரில் வழங்கியிருக்கின்றது.

இரட்டை பிரிவு இருக்கைகளை கொண்ட இந்த மாடலில் 99 சிசி ஒற்றை சிலிண்டர் எஞ்சின் பெற்ற எக்ஸ்எல் 100 மாடல் அதிகபட்சமாக 4.3bhp பவர் மற்றும் 6.5Nm டார்க் வழங்குகின்றது. ஒற்றை வேக கியர்பாக்ஸ் பெற்று விளங்குகின்றது.

எக்ஸ்எல் 100 இன்றைய தலைமுறையினருக்கு ஏற்ற வகையில் அமைந்திருக்கும் வகையில் ஒரு முறை தொட்டாலே ஸ்டார்ட் செய்யும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ள i-Touch Start நுட்பத்தின் வாயிலாக நெரிசல் மிகுந்த போக்குவரத்து சிக்னல்களில் மிக இலகுவாக வாகனத்தை இயக்குவதற்கு ஏற்றதாக அமைந்திருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் புதிதாக அமைந்துள்ள டாப் வேரியன்டில் ஸ்மார்ட்போன் உட்பட மொபைல்களை சார்ஜ் செய்யும் வகையிலான யூஎஸ்பி சார்ஜர் போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இதைத்தவிர வழக்கமான இரட்டை பிரிவு இருக்கை கொண்டுள்ளது. எக்ஸ்எல் 100 ஐ-டச் ஸ்டார்ட் வேரியன்டில் பிரத்தியேகமாக பர்ப்பிள் நிறத்தை பெற்று பாடி கிராபிக்ஸ் மற்றும் ஐ டச் ஸ்டிக்கரிங் வழங்கப்பட்டுள்ளது.

 

முதற்கட்டமாக டெல்லி, உத்திர பிரதேசம், உத்தரகான்ட் எலக்ட்ரிக் ஸ்டார்ட் பெற்ற எக்ஸ்எல் 100 HD மாடல் சாதரன வேரியன்டை விட ரூ. 2450 வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. டிவிஎஸ் XL 100 i-Touch Start விலை ரூ. 36,109 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) ஆகும்.