யூஎம் லோகியா மீது சட்டப்பூர்வ நடவடிக்கையை துவங்கிய FADA

um renegade sport s

இந்தியாவில் தனது செயற்பாட்டை நிறுத்திக் கொண்டதை தொடர்ந்து யூஎம் மோட்டார்சைக்கிள் மற்றும் லோகியா ஆட்டோ நிறுவனத்தின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கையை ஆட்டோமொபைல் விநியோகஸ்தர் சங்கத்தின் கூட்டமைப்பு (FADA) மேற்கொண்டுள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் யூஎம் மோட்டடார் சைக்கிள் நிறுவனம், இந்தியாவைச் சேர்ந்த லோகியா ஆட்டோ நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வந்த நிலையில் இந்நிறுவனம் முற்றிலுமாக தனது சேவையை தற்பொழுது நிறுத்திக் கொண்டுள்ளது. மேலும், உதிரிபாகங்கள் சப்ளை செய்வதனை நிறுத்திக் கொண்ட நிலையில் நாட்டில் உள்ள 80 டீலர்களும் மூடப்பட்டுள்ளது.

யுஎம் லோஹியா நிறுவனம், இந்தியாவில் அக்டோபர் 2018 முதல்  உற்பத்தியை நிறுத்தியதாகவும், சுமார் 150 கோடி ரூபாய் முதலீடு செய்த 80 க்கும் மேற்பட்ட டீலர்களை கொண்டிருந்தது.

இந்நிறுவனத்தின் ஒவ்வொரு டீலர்களும் சுமார் 90 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை முதலீடு செய்துள்ள நிலையில் மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளன. எனவே, இந்நிறுவனத்தின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.