டிவிஎஸ் கிராபைட் 125 ஸ்கூட்டர் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது

0

tvs 125 scooter spiedடிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ஸ்கூட்டர் சந்தையில் மிக சிறப்பான பங்களிப்பினை பெற்றுள்ள நிலையில் 125சிசி பெற்ற ஸ்டைலிஷான கிராபைட் ஸ்க்ட்டரை வடிவமைத்து சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தி வருகின்றது.

டிவிஎஸ் கிராபைட் 125

tvs 125 scooter spied 1

Google News

கடந்த 2014 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் அறிமுகம் செய்யப்பட்ட கிராபைட் என்ற ஸ்டைலிஷான கான்செப்ட் நிலை ஸ்கூட்டரை பின்னணியாக கொண்டு வடிவமைக்கப்படுகின்ற மாடலாக சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வரும் மாடல் இருக்கும் பட்சத்தில் 125சிசி எஞ்சினை பெற்ற ஸ்கூட்டராக இருக்கலாம் என கருதப்படுகின்றது.

மிகவும் ஸ்டைலிசான ரே, கிரேஸியா , ஏப்ரிலியா எஸ்ஆர் 150 ஆகிய மாடல்களை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மாடல் மிக நேர்த்தியான ஸ்போக்குகளை பெற்ற 12 அங்குல அலாய் வீல், டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர், முன்புறத்தில் கன்வென்சல் ஃபோர்க் ஆகியவற்றை பெற்றதாக காட்சி அளிக்கின்றது.

வருகின்ற பிப்ரவரி 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் முத்முறையாக உற்பத்தி நிலை மாடலாக 125சிசி ஸ்கூட்டர் காட்சிக்கு அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளதால்,அதனை தொடர்ந்து அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

video