ரிவோல்ட் முதல் மின் மோட்டார்சைக்கிள் ஸ்பை படம் வெளியானது

மின் மோட்டார்சைக்கிள்

ரிவோல்ட் இன்டெல்லிகார்ப் நிறுவனத்தின், முதல் ரிவோல்ட்டின் மின்சார மோட்டார்சைக்கிள் மாடலின் சோதனை ஓட்ட படங்கள் முதன்முறையாக இணையத்தில் வெளியாகியுள்ளது. மிகவும் ஸ்டைலிஷான தோற்றத்தில் பல்வேறு நவீன வசதிகளை கொண்டதாக விளங்க உள்ளது.

இந்தியாவின் பிரபலமான மொபைல் தயாரிப்பாளரான மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் தலைவர் ராகுல் ஷர்மா மூலம் ஹரியானா மாநிலத்தில் உள்ள மானசேர் பகுதியில் கட்டமைக்கப்பட்டுள்ள ஆலையில் முதற்கட்டமாக ஆண்டுக்கு 1.20 லட்சம் மின்சார பைக்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

ரிவோல்ட் எலெக்ட்ரிக் பைக் படம்

ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் அம்சத்தை பெற்ற பைக் மாடலாக வரவுள்ள இந்த வாகனத்தில் மிக நேர்த்தியான எல்இடி ஹெட்லைட் பெற்று பகல் நேர ரன்னிங் விளக்குடன் கூடியதாக காட்சியளிக்கின்றது.

மாடரன் ஸ்டீரிட் ஃபைட்டர் மாடலின் தோற்றத்தில் விளங்கும் இந்த மாடலில் ஸ்டைலிஷான் ஹெட்லைட் யூனிட், நேர்த்தியான டேங்க் போன்ற அமைப்பு, முன்புறத்தில் அப் சைடு டவுன் ஃபோர்க்கு, பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பர் கொண்டு இரு டயர்களிலும் டிஸ்க் பிரேக் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கின் பவர், டார்க் மற்றும் சிங்கிள் சார்ஜ் தொலைவு உள்ளிட்ட விபரங்கள் இதுவரை அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. முன்பாக வெளியான தகவலின் அடிப்படையில் சிங்கிள் சார்ஜ் மூலம் ரிவோல்ட் எலெக்ட்ரிக் பைக் 150 கிமீ பயணிக்க திறன் கொண்டதாக விளங்கும் என கூறப்படுகின்றது. வரும் ஜூன் மாதம் அதிகார்வப்பூர்வமாக ரிவோல்ட் பைக் விற்பனைக்கு வெளியாக உள்ளது.

image- thrustzone

Exit mobile version