சிறப்பு பதிப்பில் 2019 சுசுகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டர் வெளியானது

2019 Suzuki Access125 Se

சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின், சிறப்பு பதிப்பு மாடலாக வந்துள்ள சுசுகி ஆக்செஸ் 125 SE ஸ்கூட்டரில் பல்வேறு சிறப்பு வசதிகள் மற்றும் புதிய நிறம் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனத்தின், அதிக விற்பனையாகின்ற ஆக்செஸ் ஸ்கூட்டரில் புதுப்பிக்கப்பட்ட சிறப்பு பதிப்பில் , புதிய அம்சங்கள் மற்றும் நிறம் போன்றவை மிகவும் கவர்ந்திழுக்கும் வகையில் அமைந்துள்ளது. புதிய மெட்டாலிக் மேட் போர்டியாக்ஸ் நிறத்துடன், சைட் ஃபெண்டர்களில் ஒரு தனித்துவமான ‘சிறப்பு பதிப்பு’ லோகோவை பெற்றுள்ளது. இந்த பதிப்பில் கருப்பு நிற அலாய் வீல்கள், பீஜ் லீதரெட் இருக்கை மற்றும் வட்ட வடிவ குரோம் கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் ஸ்மார்ட்போன் சாதனங்களை சார்ஜ் செய்வதற்கான டிசி சாக்கெட் இணைக்கப்பட்டுள்ளது.

மேலே கூறப்பட்டுள்ள சிறப்பு வசதிகளை தவிர மற்றபடி சாதாரன டாப் டிஸ்க் வேரியண்டின் அடிப்படையிலான வசதிகளை இந்த ஸ்கூட்டர் பெற்றுள்ளது. ஆக்செஸ் 125 SE மாடலில் 124 சிசி ஒற்றை சிலிண்டர் ஏர்-கூல்ட் என்ஜின் பொருத்தப்பட்டு 8.4 பிஹெச்பி பவரும் மற்றும் 10.2 என்எம்  டார்க்கையும் வழங்குகின்றது. இந்த மாடலில் சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

ஆக்செஸ் 125 எஸ்இ மாடலின் முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் வழங்கப்பட்டிருக்கின்றது. பிரேக்கிங் முறையில் டிஸ்க் மற்றும் டிரம் பிரேக்குடன் சிபிஎஸ் அம்சத்துடன் பொருத்தப்பட்டுள்ளது.

2019 Suzuki Access125 Color

புதிய நிறத்துடன், முன்பாக கிடைத்து வந்த மெட்டாலிக் மேட் பிளாக், மெட்டாலிக் சோனிக் சில்வர் மற்றும் பேர்ல் மிராஜ் வைட் போன்ற நிறங்களுடன் சுசுகி ஆக்செஸ் 125 SE விலை ரூபாய் 65,491 (எக்ஸ்ஷோரூம் சென்னை ) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.