Automobile Tamilan

இந்தியாவில் வெஸ்பா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுக விபரம்

பியாஜியோ இந்தியா பிரிவின் சிஇஓ டியாகோ கிராஃபி , வெஸ்பா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகத்தை உறுதி செய்துள்ளார். எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தவிர அப்ரிலியா நிறுவனத்தின், ஆர்எஸ் 660, டூயூனோ 660 உட்பட 300-400சிசி சந்தையில் புதிய மாடல்களை வெளியிட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரிலியா நிறுவனம் அடுத்த சில நாட்களுக்குப் பிறகு எஸ்எக்ஸ்ஆர் 160 மேக்ஸி ஸ்கூட்டர் மாடலை வெளியிட உள்ள நிலையில், வெஸ்பா பிரிவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியிடுவதனை உறுதி செய்துள்ளது. மேலும் இந்நிறுவனம், ஏப்ரிலியா ESR1 என்ற பெயரை எலக்ட்ரிக் ஸ்கூட்டராக இந்திய சந்தைக்கு விற்பனைக்கு வெளியிட பதிவு செய்துள்ளது. இங்கே குறிப்பிடதக்கதாகும்.

வெஸ்பா எலக்ட்ரிக்கா சிறப்புகள்

இந்நிறுவனத்தின் Electtrica ஸ்கூட்டர் மாடலின் அடிப்படையிலான ஸ்கூட்டர் இந்தியாவில் வெளியாகும் வாய்ப்புள்ளதால், மின் ஸ்கூட்டர் 4.3kWh லித்தியம் ஐயன் பேட்டரி பேக்கினை பொருத்தி புரூஸ்லெஸ் டிசி மோட்டார் மூலமாக 4kW பவர் மற்றும் தொடர்ச்சியான முறையில் 3.6kW பவரை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மின் ஸ்கூட்டரில் ஈக்கோ மற்றும் பவர் என இரண்டு சவாரி முறைகளுடன் வருகின்றது.

ஈக்கோ முறையில் 100 கிமீ தொலைவு பயணிக்கவும், பவர் மோடில் 70 கிமீ பயணிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. பவர் மோடில் அதிகபட்சமாக மணிக்கு 70 கிமீ வேகத்திலும், ஈக்கோ மோடில் 45 கிமீ வேகத்திலும் பயணிக்கும் திறனை கொண்டுள்ளது. TFT இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரில் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி ஆதரவை பெற்றிருப்பதுடன் வெஸ்பா ஆப் வழங்கப்படுகின்றது.

ரெட்ரோ ஸ்டைல் பெற்ற ஸ்கூட்டரில் வட்ட வடிவ எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் விளக்கு, 12 அங்குல வில் மற்றும் 10 அங்குல வீல் வழங்கப்படுவதுடன் முன் பக்கமாக சிங்கிள் சைட் ட்ரைலிங் லிங்க் சஸ்பென்ஷனுடன் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரை பெற்றுள்ளது. முன்புறத்தில் பிரேக்கிங் 200 மிமீ டிஸ்க் மற்றும் 140 மிமீ டிரம் பெற்றுள்ளது.

ஐரோப்பா சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற வெஸ்பா எலக்ட்ரிக்கா இந்தியாவிற்கு 2021 ஆம் ஆண்டின் இறுதி அல்லது 2022 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் வெளியாகும் என எதிர்பாரக்கலாம்.

Exit mobile version