ரேஞ்சு 70 கிமீ.., சியோமி ஏ1, ஏ1 புரோ எலக்ட்ரிக் மொபட் அறிமுகம்

சீனாவின் முன்னணி ஸ்மார்ட்போன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பாளரான சியோமி வெளியிட்டுள்ள ஏ1 மற்றும் ஏ1 புரோ என இரு எலக்ட்ரிக் மொபட்டில் அதிகபட்சமாக 70 கிமீ ரேஞ்சை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ1 வரிசையில் வெளியிடப்பட்டுள்ள புதிய எலக்ட்ரிக் மொபட் முதற்கட்டமாக சீனாவில் மிகவம் விலை குறைவாக  2,999 yuan (ரூ. 31,685) புரோ மாடல் 3,999 yuan (ரூ. 52,816) விலையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாடலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கிமீ ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.

ஹப் மவுன்ட்டெட் மோட்டாரை பெற்றுள்ள இந்த இ-மொப்ட்டில் உள்ள ஏ1 வேரியண்டில் 7.68Wh பேட்டரி பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 60 கிமீ ரேஞ்சை வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்தப்படியாக ஏ1 புரோவில் 960Wh பேட்டரி பொருத்தப்பட்டு 70 கிமீ ரேஞ்சை வழங்குகின்றது.

மேலும் இந்த மாடலில் 16 அங்குல வீல் கொடுக்கப்பட்டு, டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறத்தில் ட்வின் ஷாக் அப்சார்பர் வழங்கப்பட்டு எல்இடி ஹெட்லெம்ப், டிஜிட்டல் கிளஸ்ட்டர், ஒற்றை இருக்கை கொண்டுள்ள இந்த மாடலின் மொத்த எடை 57 கிலோ ஆகும்.

6.8 அங்குல டச் ஸ்கீரின் கிளஸ்ட்டரில் 4ஜி ஆதரவு இ-சிம் , புளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதியுடன், ஜிபிஎஸ் நேவிகேஷன் உடன் 1,080p வைட் ஏங்கிள் கேமரா வழங்கப்பட்டு ரைடினை பதிவு செய்துக் கொள்ளலாம். இதன் மூலம் 90 நிமிடம் வரை வீடியோ பதிவு செய்யலாம்.

Exit mobile version