யமஹா FZS Fi விண்டேஜ் எடிசன் விற்பனைக்கு வெளியானது

0

yamaha fzs fi vintage edition

ரெட்ரோ ஸ்டைலை நினைவுப்படுத்துகின்ற வகையில் யமஹா FZS Fi விண்டேஜ் எடிசன் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள பைக்கின் விலை ரூ.1,10,439 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. சாதாரண வேரியண்டை விட ரூ.5000 வரையும், டார்க் நைட் எடிசன் மாடலை விட ரூ.2,000 வரை கூடுதலாக அமைந்துள்ளது.

Google News

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள் கனெக்ட் எக்ஸ் வசதியுடன் இணைக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள விண்டேஜ் எடிசனில் தோற்ற அமைப்பு மற்றும் வசதிகளில் மாற்றம் இல்லாமல் விண்டேஜ் பச்சை நிறத்துடன், வழக்கமான இருக்கை இப்போது பழைய பாரம்பரியத்தை நினைவுப்படுத்தும் வகையிலான லெதர் கவர் இணைக்கப்பட்டுள்ளது.

FZ S FI பைக்கில் 149 சிசி, ஒற்றை சிலிண்டர், ஏர்-கூல்ட், 2-வால்வு, மூலம் பவர் 9.1 கிலோவாட் அல்லது 12.4 பிஎஸ் பவர் மற்றும் 13.6 என்எம் டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

yamaha vintage fzs fi

யமஹா FZS Fi விலை பட்டியல்

யமஹா FZ S FI – ரூ.1,05,439

யமஹா FZS FI டார்க் நைட் – ரூ.1,08,439

யமஹா FZ S FI விண்டேஜ் எடிசன் – ரூ.1,10,439

(எக்ஸ்ஷோரூம் தமிழ்நாடு)

web title : yamaha fzs fi vintage edition launched in India