யமஹா ஏராக்ஸ் 155 இந்தியா வருகை ரத்து

இந்திய சந்தையில் ஸ்கூட்டர் மீதான ஈர்ப்பு நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் பிரிமியம் ரக ஸ்கூட்டர் மாடல்கள் அறிமுகம் அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகி வரும் நிலையில், யமஹா ஏராக்ஸ் 155 ஸ்கூட்டர் இந்திய சந்தையில் விற்பனைக்கு வராது என எதிர்பார்க்கப்படுகின்றது.

யமஹா ஏராக்ஸ் 155

சர்வதேச அளவில் தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஏராக்ஸ் ஸ்கூட்டரில் யமஹா ஆர்15 V3.0 பைக்கில் இடம்பெற்றுள்ள அதே எஞ்சின் அடிப்படையில் 14 bhp ஆற்றல் மற்றும் 13.8 Nm டார்க் ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் உடன் கூடிய  155 சிசி VVA ( Variable Valve Actuation ) ஒற்றை சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

நேக்டு பைக்குகளுக்கு இணையான ஸ்போர்ட்டிவ் ஸ்கூட்டராக விளங்குகின்ற ஏரோக்ஸ் 155 மாடலில் எல்இடி ஹெட்லேம்ப்,எல்இடி டெயில்லைட், 5.8 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்பிளே, ஸ்மார்ட் கீ சிஸ்டம், மொபைல் சார்ஜிங் போர்ட் மற்றும் 25 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஸ்டோரேஜ் ஆகியவற்றை பெற்றதாக விளங்குகின்றது.

ஆட்டோ எக்ஸ்போ 2018 வாகன கண்காட்சிக்கு முன்பாக டீலர்களிடம் காட்சிக்கு கிடைத்ததாக வெளியான படங்களை தொடர்ந்து ஆட்டோ எக்ஸ்போவல் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆனால் காட்சிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் ஏராக்ஸ் ஸ்கூட்டர் விலை ரூ. 1 லட்சத்தில் அமைந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் , பிராண்டின் மீதான மதிப்பினை உயர்த்த வாடிக்கையாளர்கள் கருத்துகளை கேட்கவே இந்த ஸ்கூட்டர் காட்சிப்படுத்தப்பட்டதாக தெரிகின்றது. தற்போது வெளிவந்துள்ள தகவலின் அடிப்படையில் ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டர் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.