Home Bike News

10-15 % விலை உயர்வை சந்திக்க உள்ள யமஹா பிஎஸ் 6 பைக், ஸ்கூட்டர்கள்

Yamaha YZF R15 V3 Monster Energy MotoGP limited edition

யமஹா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அனைத்து பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களுக்கு 10-15 சதவீதம் வரை பிஎஸ் 6 அல்லது பாரத் ஸ்டேஜ் 6 அறிமுகத்திற்கு பின்னர் விலை உயரக்கூடும் என தெரிவித்துள்ளது. யமஹா பைக்குகளில் பாரத் ஸ்டேஜ் 6 நடைமுறை நவம்பர் 2019 முதல் வெளியாக உள்ளது.

ஏப்ரல் 2020க்கு பிறகு இந்தியாவில் பிஎஸ் 6 மாசு விதிகளுக்கு உட்பட்ட என்ஜின்கள் மட்டும் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட உள்ளதால், அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் புதிய மாசு விதிகளுக்கு ஏற்ப தங்கள் வாகனங்களை வெளியிட வேண்டி உள்ளது. இந்நிலையில் யமஹா நிறுவனம், முதல் பிஎஸ் 6 மாடலை நவம்பர் மாதமும், தனது ஸ்கூட்டர்களில் பிஎஸ் 6 என்ஜினை ஜனவரி 2020 முதல் விற்பனைக்கு வெளியிட திட்டமிட்டுள்ளது.

மேலும், வரவிருக்கும் பிஎஸ் 6 மாடல்களில் சைடு ஸ்டேன்ட் செயற்படுத்தியுள்ள நேரங்களில் என்ஜின் ஸ்டார்ட் ஆகாத வகையிலான நுட்பத்தை இணைக்க உள்ளது. புதிய பாடி கிராபிக்ஸ், கூடுதல் வசதிகள் போன்ற காரணங்களால் 10-15 சதவீத விலை உயர்வு கட்டாயமாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version