110சிசி ஸ்கூட்டர் சந்தையிலிருந்து வெளியேறும் யமஹா

0

யமஹா ஃபேசினோ 125 fi

இந்தியா யமஹா மோட்டார் நிறுவனம் ஸ்கூட்டர் விற்பனையில் படிப்படியாக தனது சந்தை மதிப்பை அதிகரித்து வரும் நிலையில், சமீபத்தில் வெளியிடப்பட்ட யமஹா ஃபேசினோ 125 எப்.ஐ ஸ்கூட்டரை தொடர்ந்து முதன்முறையாக 125சிசி ஸ்கூட்டர் சந்தையில் நுழைந்தது.

Google News

இந்நிலையில், தற்போது இந்நிறுவனம் விற்பனை செய்து வருகின்ற அனைத்து பிஎஸ்4 ஸ்கூட்டர்களும் 113சிசி என்ஜினை பெற்றதாகும், இதனை பிஎஸ்6 நடைமுறைக்கு மாற்றாமல் புதிதாக 125சிசி என்ஜினை உருவாக்கி யமஹா `ஃபேசினோ 125 Fi மாடலில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டர் ஜனவரி 2020 முதல் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. இதுதவிர இந்நிறுவனம் யமஹா ரே இசட்ஆர் 125 மற்றும் ரே இசட்ஆர் 125 ஸ்டீரிட் ரேலி போன்ற மாடல்களை காட்சிப்படுத்தியது.

தற்போதுள்ள 110 சிசி என்ஜின்களை பிஎஸ் 6 புதுப்பிக்கும் போது பவர் குறைவதுடன் விலையும் அதிகரிக்கும். எனவே, ஃபேசினோ 110 மற்றும் ரே இசட்ஆர் 110 ஆகிய இரு மாடலையும் நீக்க யமஹா முடிவு செய்துள்ளது. 2020 ஏப்ரல் 1 ஆம் தேதி பிஎஸ் 6 மாடல்கள் மட்டும் விற்பனை செய்யப்பட உள்ளது.

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய 125 சிசி ஃபேசினோ மற்றும் ரே இசட்ஆர் மாடல்கள் சிறப்பான வரவேற்பினை பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் தங்கள் ஸ்கூட்டர் சந்தை பங்கை 10 சதவீதமாக இரட்டிப்பாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.