Site icon Automobile Tamil

வரும் 2019ல் இந்தியாவில் அறிமுகமாகிறது யமஹா NMAX 155cc ஸ்கூட்டர்

இந்திய மார்க்கெட்டில் 125cc ஸ்கூட்டர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக யமஹா நிறுவனம் தனது புதிய NMax 155cc ஸ்கூட்டர்களை வரும் 2019ம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்தாண்டின் முற்பகுதியில் யமஹா ஏராக்ஸ் எஸ் 155cc ஸ்கூட்டர்கள், இந்தியா கொண்டு வரப்பட்டது. மேலும் சென்னையில் இந்த ஸ்கூட்டர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டது. யமஹா NMAX 155cc ஸ்கூட்டர்கள் வெஸ்பா ஸ்கூட்டர்களுக்கு மாற்றாக இருப்பதுடன், ஏபீரியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

யமஹா NMAX 155cc ஸ்கூட்டர்கள், லிக்யுட் கூல்டு, 4-வால்வ் இன்ஜின்களுடன் 14.8PS ஆற்றலுடன் 8,000rpm-லும், 14.4Nm டார்க்யூ-ல் 6,000 rpm-லும் இயங்கும். யமஹா NMAX 155cc ஸ்கூட்டர்கள், ஏபீரியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர்களை விட அதிக ஆற்றல் கொண்டதாக இருக்கும்.

யமஹா NMAX 155cc ஸ்கூட்டர்களில், LED லைட்டிங் செட்டப், முழுவதும் டிஜிட்டல் இன்ஸ்டுரூமென்ட் கிளச்சர், ABS, டிஸ்க் பிரேக் மற்றும் ஸ்போர்ட்ஸ் லூக் கொண்டதாக இருக்கும். இந்த ஸ்கூட்டர்கள் முன்புறம் வின்ட் ஸ்கிரீன்களுடனும், ஸ்பிலிட் ப்ளோர் போர்டு மற்றும் நீண்ட ஸ்டெப் அப் சீட்களை கொண்டிருக்கும். யமஹா NMAX 155cc ஸ்கூட்டர்கள், முன்புறத்தில் 110/70-13 மற்றும் பின்புற 130/70-13 வீர்கள் கொண்டதாக இருக்கும்.

யமஹா NMAX 155cc ஸ்கூட்டர்கள் பிலிப்பைன்ஸ் நாட்டில் வெளியானது. அங்கு இதன் விலை இந்திய மதிப்பில் 1.5 லட்ச ரூபாயாகும். எனவே இந்தியாவில் வெளியாகும் போது அதற்கேப மாற்ற செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version