Automobile Tamilan

இந்தியாவில் ஐஷர் ஸ்கைலைன் ப்ரோ மின்சார பேருந்து அறிமுகம்

வால்வோ ஐஷர் வர்த்த வாகன பிரிவின் ஐஷர் டிரக் மற்றும் பஸ் நிறுவனம், இந்தியாவில் முதல் மின்சாரத்தில் இயங்கும் பேருந்தை KPIT ரெவாலோ நுட்பத்துடன் ஐஷர் ஸ்கைலைன் ப்ரோ பஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

ஐஷர் ஸ்கை லைன் ப்ரோ

ஐஷர் நிறுவனத்தின் ஸ்கைலைன் பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள முதல் மின்சார பேருந்து மாடலில் KPIT டெக்னாலாஜிஸ் நிறுவனத்தின் ரெவாலோ எனப்படும் மின்சார வாகனத்திற்கான நுட்பத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி வர்த்தக வாகன தயாரிப்பாளர்கள் மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகள் மீதான உற்பத்திக்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ள நிலையில், இந்த வரிசையில் ஐஷர் நிறுவனமும் இணைந்துள்ளது. இந்த பேருந்து மிக சிறப்பான வகையில் மின்சாரத்தை சேமிப்பதுடன் சுற்றுசூழல் மாசுபாட்டை முற்றிலும் தவிர்க்கும்.

ரெவாலோ நுட்பம் குறைந்த வோல்டேஜிலும் பேருந்து உட்பட பெரிய வாகனங்களை இயக்கும் வகையிலான நுட்பத்தை பெற்றிருக்கின்றது. இந்திய சாலைகளுக்கு ஏற்ற வகையில் மின்சாரத்தில் செயல்படும் வாகனங்களுக்கு ஏற்றதாக இந்நிறுவனத்தின் நுட்பம் விளங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் அமைந்துள்ள ஐஷர் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட உள்ள 9 மீட்டர் நீலமுள்ள முழுமையான ஏசி வசதி பெற்ற ஸ்கைலைன் ப்ரோ E பேருந்துகள் முழுமையான சிங்கிள் சார்ஜில் அதிகபட்மாக 177 கிமீ தொலைவு பயணிக்கும் திறன் கொண்டிருக்கும். 0.8 யூனிட் மின்சாரத்திற்கு ஒரு கிலோமீட்டர் பயணிக்கும் வகையில் இந்த பேருந்துகள் இயங்கும் என தெரிவிகப்பட்டுள்ளது.

போக்குவரத்து துறையில் புதிய புரட்சியை நோக்கிய பயணத்தை தொடங்கியுள்ள இந்தியாவின் முயற்சியில் மிக சிறப்பான நுட்பத்தினை மொபைலிட்டி தீர்வுகளில் வழங்கும் நோக்கில் கேபிஐடி டெக்னாலாஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து வழங்குவதுடன், நகரப்பேருந்துகளுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஸ்கைலைன் இ பேருந்துகளுக்கு நாடு முழுவதும் உள்ள ஐஷர் டீலர்கள் அதற்கான தீர்வினை வழங்குவார்கள் என விஇ வர்த்தக வாகன பிரிவு நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி வினோத் அகர்வால் தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version