Automobile Tamilan

மஹிந்திரா க்ரூஸியோ பஸ் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது

mahindra cruzio bus

மஹிந்திரா டிரக் மற்றும் பஸ் பிரிவு அறிமுகப்படுத்தியுள்ள புதிய மஹிந்திரா க்ரூஸியோ பேருந்து பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணையான என்ஜின் பெற்று நடுத்தர ரக வர்த்தக வாகன பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜூலை 25 முதல் 27 வரை நவி மும்பையில் நடைபெற்ற இரண்டாம் ஆண்டு பிரவாஸ் 2019 சர்வதேச பேருந்து மற்றும் கார் டிராவல் ஷோ அரங்கில் பல்வேறு நிறுவனங்களின் மாடல்கள் காட்சிப்படுத்தப்பட்டது.

மஹிந்திரா தனது இடைநிலை வர்த்தக வாகனங்கள் (ஐ.சி.வி) பிரிவில் புதிய க்ரூசியோ பஸ் மாடலை ஸ்டாஃப் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் வெளியிட்டுள்ளது. க்ரூஸியோ சிறந்த முறையிலான இருக்கை அகலத்தை வழங்குகிறது, மேலும் அவை முழுமையான சொகுசு தன்மையை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த பேருந்து மஹிந்திரா காப்புரிமை பெற்றுள்ள ஃபியூயல்ஸ்மார்ட் தொழில்நுட்பத்துடன் வந்துள்ளது. இது எரிபொருள் சிக்கனத்தை மேம்படுத்த உதவுகிறது.

மஹிந்திரா நிறுவனம் இந்த பேருந்தில் டிரைவர் திறன் மேம்படுத்த மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த உதவும் கருவியை கிளஸ்டரில் (Intelligent Driver Information System) கொடுத்துள்ளது. இந்த பேருந்து ரோல்ஓவர் பாதுகாப்புடன் மற்றும் புதிய பஸ் பாதுகாப்பு குறியீடு விதிமுறைகளான AIS 052, AIS 031 மற்றும் AIS 153 ஆகியவற்றுக்கு ஏற்ப தயாரிக்கப்படுகிறது. மஹிந்திரா க்ரூஸியோ பஸ்சின் நுட்பவிபரங்களை இந்நிறுவனம் வெளியிடவில்லை.

Exit mobile version