ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி விரைவில்

0
ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி கார் என்ற பெயரில் ஃபோக்ஸ்வேகன் போலோ கார் விற்பனைக்கு வரவுள்ளது. போலோ ஜிடி காரில் 1.2 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.

1.2 லிட்டர் டிஎஸ்ஐ(TSI) பெட்ரோல் இன்ஜின் 105 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய சக்திவாயந்த இன்ஜினாக இருக்கும்.  டிஎஸ்ஜி(DSG) 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டிருக்கும்.  இந்த இன்ஜின் இந்தியாவின் முதல் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜினாக விளங்கும்.

Polo SR

 போலோ ஜிடி காரில் மேனுவல் டிரான்ஸ்மிஷனில் வெளிவராது. பாடி அமைப்பு மற்றவை சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட போலோ எஸ்ஆர் போலவே இருக்கும்.

போலோ ஜிடி விபரங்கள் மற்றும் விலை விபரங்கள் இன்னும் தெரியவரவில்லை. ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி கார் இந்த மாதம் இறுதிக்குள் விற்பனைக்கு வரலாம். தற்பொழுது சோதனையில் உள்ளது.

ஃபோக்ஸ்வேகன் போலோ எஸ்ஆர் பற்றி படிக்க