அசோக் லேலண்ட் பார்ட்னர் மற்றும் குரு டிரக் விற்பனைக்கு அறிமுகம்

0

இந்திய வர்த்தக வாகன தயாரிப்பாளரான அசோக் லேலண்ட் நிறுவனத்தின் புதிய பார்ட்னர் மற்றும் குரு என இரு டிரக் மாடல்கள் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. பார்ட்னர் டிரக் எல்சிவி பிரிவிலும் குரு டிரக் ஐசிவி பிரிவிலும் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் நிசான் மற்றும் அசோக் லேலண்டின் எல்சிவி கூட்டணி பிரிவுக்கு பின்னர் அறிமுகம் செய்யப்பட்டுள்ள முதன்முறையாக எல்சிவி (Light Commercial Vehicle – LCV)  மற்றும் ஐசிவி (intermediate commercial vehicle – ICV) ) ரகத்தில் டிரக்குகள் வெளிவந்துள்ளன. இந்த இரு மாடல்களுமே நாடு முழுவதும் உள்ள 375 அசோக் லைலண்டு டீலர்கள் வாயிலாக உடனடியாக விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google News

புதிய அசோக் லேலண்ட் பார்ட்னர்

7 டன் வரையிலான தொடக்க நிலை எல்சிவி பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பார்ட்னர் டிரக்கின் எடை தாங்கும் திறன் 6.9 டன்லிருந்து 7.2 டன்னாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் 105 ஹெச்பி பவர் மற்றும் 285 என்எம் டார்க் வெளிப்படுத்தும் பிஎஸ் 4 ZD30 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் பிஎஸ் 3 மாடல் 118 ஹெச்பி பவர் மற்றும் 320 என்எம் டார்க் வெளிப்படுத்தும்.

மிகவும் நேர்த்தியாக கட்டமைக்கப்பட்ட கேபினை பெற்றுள்ள பார்ட்னர் டிரக்கில் ஏசி ஆப்ஷனலாக கிடைக்கும்.  பாட்னர் டிரக் 4 மற்றும் 6 டயர் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

அசோக் லேலண்ட் குரு

எல்சிவி மற்றும் ஹெச்சிவி மாடல்களுக்கு இடையில் நிலை நிறுத்தப்பட்டுள்ள லேலண்டின் குரு டிரக் 12 முதல் 13 டன் வரையிலான எடை தாங்கும் திறனை கொண்டதாகும். குரு டிரக்கிலும் பிஎஸ் 3 மற்றும் பிஎஸ் 4 மாசு கட்டுப்பாடு ஹெச் சீரிஸ் பயன்படுத்தப்பட்டு 115 ஹெச்பி பவர் மற்றும் 320 என்எம் டார்க் வெளிப்படுத்தும்.

பார்ட்னர் மற்றும் குரு டிரக் விலை பட்டியல்

புதிய அசோக் லேலண்ட் பார்ட்னர் டிரக் விலை ரூ .10.29 லட்சம் முதல் ரூ.10.59 லட்சம் வரை

அசோக் லேலண்ட் குரு டிரக் விலை ரூ .14.35 லட்சம் முதல் ரூ.16.72 லட்சம் வரை

(அனைத்தும் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை)

ஆட்டோமொபைல் தமிழன் வழங்கும் மோட்டார் டாக்கீஸ் automobiletamilan.com