அபார்த் புன்ட்டோ , அவென்ச்சுரா விற்பனைக்கு வந்தது

0
ஃபியட் அபார்த் புன்ட்டோ மற்றும் அபார்த் அவென்ச்சுரா  பெர்ஃபாமென்ஸ் கார்கள் ரூ.9.95 லட்சத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. அபார்த் புன்ட்டோ மற்றும் அபார்த் அவென்ச்சுரா இரண்டு கார்களுமே சிறப்பான செயல்திறனை தரவல்லதாகும்.

அபார்த் புன்ட்டோ

அபார்த் புன்ட்டோ

145 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் சக்திவாய்ந்த 1.4 லிட்டர் டி- ஜெட் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.  இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

0 முதல் 100கிமீ வேகத்தினை எட்டுவதற்க்கு 8.8 விநாடிகள் எடுத்துக்கொள்ளும். அபார்த் புன்ட்டோ காரின் உச்சகட்ட வேகம் மணிக்கு 200கிமீ ஆகும். இதன் மைலேஜ் லிட்டருக்கு 16.3கிமீ ஆகும்.

சாதரன புன்ட்டோ காரில் இருந்து கூடுதல் சிறப்பு தோற்ற பொலிவினை பெற்றுள்ள  அபார்த் புன்ட்டோ மாடலில் அபார்த் லோகோ , அபார்த் ஸ்டிக்கரிங் , 16 இஞ்ச் ஸ்கார்ப்பியன் அலாய் வீல் மற்றும் மேற்கூரையில் ஸ்கார்ப்பியோ படம் ஸ்டிக்கரிங் செய்யப்பட்டுள்ளது.

Google News

உட்புறத்தில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் தைக்கப்பட்ட ஃபேபரிக் இருக்கைகள் , ஸ்போர்ட்வ் பெடல் , அபார்த் ஸ்டீயரிங் லோகோ போன்றவற்றை பெற்றுள்ளது.

பாதுகாப்பில் அபார்த் புன்ட்டோ காரில் இரண்டு முன்பக்க காற்றுப்பைகள் , ஏபிஎஸ் இபிடி , தீ தடுப்பு சிஸ்டம் போன்றவற்றை நிரந்தரமாக பெற்றுள்ளது.

அபார்த் புன்ட்டோ கார் விலை ரூ.9.95 லட்சம் (எக்ஸ்ஷோரூம் டெல்லி)

abarth punto top

அபார்த் அவென்ச்சுரா 

அபார்த் புன்ட்டோ காரை போலவே தோற்றத்தில் அபார்த் ஸ்டீக்கரிங் , லோகோ ,  உட்பறத்தில் புன்ட்டோ தோற்றம் போன்றவற்றை பெற்றுள்ளது.

அபார்த் அவென்ச்சுரா
அபார்த் அவென்ச்சுரா

140 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் சக்திவாய்ந்த 1.4 லிட்டர் டி- ஜெட் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.  இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

0 முதல் 100கிமீ வேகத்தினை எட்டுவதற்க்கு 9.9 விநாடிகள் எடுத்துக்கொள்ளும். அபார்த் அவென்ச்சுரா காரின் மைலேஜ் லிட்டருக்கு 17.1 கிமீ ஆகும்.

அபார்த் அவென்ச்சுரா கார் விலை ரூ.9.95 லட்சம் (எக்ஸ்ஷோரூம் டெல்லி)

அபார்த் அவென்ச்சுரா

Abarth Punto Evo, Abarth Avventura launched in India