ஆடி RS6 அவண்ட் கார் விற்பனைக்கு வந்தது

இந்தியாவில் ஆடி RS6 அவண்ட் எஸ்டேட் கார் ரூ.1.35 கோடி விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆடி A6  காரின் பெர்ஃபாமன்ஸ் வெர்ஷன் மாடலாக ஆடி ஆர்எஸ்6 கார் விளங்கும்.

ஆடி RS6 அவண்ட்

ஆடி ஆர்எஸ்6 அவண்ட் 552பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 4.0 லிட்டர் வி8 டர்போசார்ஜ்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 8 வேக தானியங்கி டிரான்ஸ்மிஷன்  பயன்படுத்தியுள்ளனர்

0-100கிமீ வேகத்தினை எட்டுவதறக்கு 3.9 விநாடிகள் எடுத்துக்கொள்ளும். ஆடி RS6 அவண்ட் காரின் உச்சகட்ட வேகம் மணிக்கு 304கிமீ ஆகும்.

முகப்பில் சிங்கிள் பிரேம் கிரில்ல் ஆடி இலச்சினை மற்றும் ஆர்எஸ்6 பேட்ஜ் பதிக்கப்பட்டுள்ளது. 20 இஞ்ச் ஆலாய் வீல் (21 இஞ்ச் ஆலாய் வீல் ஆப்ஷனலாக கிடைக்கும்) மேட்ரிக்ஸ் எல்இடி விளக்குகள் அப்ஷனலாக கிடைக்கும். மேலும் சிறப்பான சொகுசு தன்மையை வழங்க கூடிய கருப்பு வண்ண உட்புறம் நல்ல இடவசதியை அளிக்கும் வகையில் இருக்கைகள் தரப்பட்டுள்ளது.

ஆடி RS6 அவண்ட் இன்டிரியர்

6 காற்றுப்பைகள் , ஸ்டெபில்ட்டி கட்டுப்பாடு , ஆடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் , பிரீ சென்ஸ் பிளஸ் பிரேக் உதவி போன்ற பாதுகாப்பு அம்சங்கள் கொண்டுள்ளது.

RS6 அவண்ட் காருக்கு நேரடியாக போட்டியை தரக்கூடிய மாடல் இன்னும் இந்தியாவிற்க்கு வரவில்லை என்பதனால் நல்ல விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முழுதும் கட்டமைக்கப்பட்ட மாடலாக RS6 அவண்ட் கார் இறக்குமதி செய்யப்பட உள்ளது.

ஆடி RS6 அவண்ட் கார் விலை ரூ.1.35 கோடி (ex-showroom, Delhi)

ஆடி RS6 அவண்ட்

Audi RS6 Avant car launched in India.