ஈக்கோஸ்போர்ட் பிளாட்டினம் எடிசன் அறிமுகம்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரில் கூடுதல் வசதிகளை கொண்ட ஈக்கோஸ்போர்ட் பிளாட்டினம் எடிசன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பதிப்பில் 8 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பினை பெற்றுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிளாட்டினம் எடிசனில் மேற்கூரை கருப்பு வண்ணம் , 17 அங்குல அலாய் வீல் , முன் மற்றும் பின் பம்பர்களில் அப்லிக்யூஸ் மற்றும் 8 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் நேவிகேஷன் அமைப்பு , ரியர் வியூ கேமரா போன்றவற்றை பெற்றுள்ளது.

125 பிஎஸ் பவர் மற்றும் 170 என்எம் டார்க் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட்  என்ஜின்  மற்றும் 100 பிஎஸ் பவர் மற்றும் 2015 என்எம் டார்க் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் TDCi எஞ்சின் மாடலிலும் இந்த வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இந்த இரண்டிலும் 5 வேக மேனுவல்கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. ஆட்டோமேட்டிக் வேரியன்டில்பிளாட்டினம் எடிசன் அறிமுகம் செய்யப்பட வில்லை.

சாதரன டைட்டானியம் ப்ளஸ் வேரியன்ட் மாடலை விட ரூ . 70000 கூடுதலாக அமைந்துள்ள பிளாட்டினம் எடிசன் தொடர்ச்சியாக விற்பனை செய்யப்பட உள்ளது. இது வரையறுக்கப்பட்ட பதிப்பல்ல.

புதிய பிளாட்டினம் பதிப்புவிலை

1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் டைட்டானியம்+ – ரூ.10.39 லட்சம்

1.5 லிட்டர் TDCi டீசல் எஞ்சின்  டைட்டானியம் + – ரூ.10.69 லட்சம்

( அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை )

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பிளாட்டினம் படங்கள்

 

 

Recommended For You