உலகின் சிறந்த கார் 2017 : ஜாகுவார் F-பேஸ்

0

2017-ம் ஆண்டின் உலகின் சிறந்த காராக ஜாகுவார் எஃப்-பேஸ் எஸ்யூவி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது தவிர மற்ற சிறந்த கார்களின் பிரிவுகளிலும் வெற்றி பெற்ற கார்கள் நியூயார்க் ஆட்டோ ஷோ அரங்கில் அறிவிக்கப்பட்டுள்ளது.

world car trophy 2017

Google News

உலகின் சிறந்த கார் 2017

  • வோர்ல்டு கார் ஆஃப் தி இயர் பட்டத்தை ஜாகுவார் எஃப்-பேஸ் எஸ்யூவி வென்றுள்ளது.
  • உலகின் சிறந்த சொகுசு காராக பென்ஸ் இ கிளாஸ் கார் வெற்றி பெற்றுள்ளது.

கடந்த 2017 ஜெனிவா மோட்டார் ஷோ அரங்கில் அறிவிக்கப்பட்ட இறுதி போட்டியாளர்களை தொடர்ந்து வெற்றி பெற்றுள்ள கார்கள் 2017 நியூ யார்க் ஆட்டோ ஷோ அரங்கில் அறிவிகப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

wcoty jaguar

உலகின் முன்னணி ஆட்டோமொபைல் இதழ்களின் 23 நாடுகளை சேர்ந்த 75 சிறந்த ஆசிரியர்களை கொண்டு தேர்வு செய்யப்படும் இந்த கார்கள் கடந்த 6 மாதங்களாக சோதனை செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றி பெற்றுள்ள கார்களின் பட்டியல்…

2017 Car of the Year 

ஜாகுவார் F‐Pace எஸ்யூவி  2017 ஆம் ஆண்டின் உலகின் சிறந்த காராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இறுதி சுற்றில் பங்கேற்ற போட்டியாளர்கள் ஆடி Q5 மற்றும் ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆகும்.

2017 world car of the year jaguar

2017 World Car Design

சிறந்த காரை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டின் உலகின் சிறந்த டிசைன் பெற்ற காராக மீண்டும் ஜாகுவார் F‐Pace தேர்வு செய்யப்பட்டுள்ளது. இறுதி சுற்றில் பங்கேற்ற போட்டியாளர்கள் மெர்சிடஸ் பென்ஸ் S கிளாஸ் கேப்ரியோல்ட் மற்றும் டொயோட்டா C‐HR ஆகும்.

Jaguar F Pace

2017 World Urban Car

உலகின் சிறந்த நகர்புற காராக பங்கேற்ற இறுதி சுற்று போட்டியாளர்களான  பிஎம்டபிள்யூ i3, சிட்ரோன் C3 மற்றும் சுசூகி இக்னிஸ் போன்ற மாடல்களில் 2017 ஆம் ஆடன்டின் உலகின் சிறந்த அர்பன் கார் என்ற பெருமையை  பிஎம்டபிள்யூ i3 பெற்றுள்ளது.

2017 world urban car of the year bmw i3

2017 World Luxury Car 

2017 ஆம் ஆண்டில் உலகின் சிறந்த சொகுசு காராக மெர்சிடிஸ்-பென்ஸ் E கிளாஸ் கார் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இறுதி போட்டியில் பங்கேற்ற மற்ற சொகுசு கார்கள் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் மற்றும் வால்வோ S90 / V90 போன்றவையாகும்.

2017 world luxuary car of the year bemz e class

2017 World Performance Car  

2017 ம் வருடத்தின் மிக சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும் மாடலாக தேர்வு செய்யப்பட பங்கேற்ற கார்களில் ஆடி R8 ஸ்பைடர் மற்றும் மெக்லாரன் 570S போன்ற பெர்ஃபாமென்ஸ் கார்களை வீழ்த்தி சிறந்த பெர்ஃபாமென்ஸ் காராக போர்ஷே பாக்ஸ்டர்/கேமேன் வெற்றி பெற்றுள்ளது.

2017 world performance car of the year porsche

2017 World Green Car

2017 ஆம் ஆண்டின் சுற்றுசூழலுக்கு ஏற்ற காராக  டொயோட்டா பிரையஸ் பிரைம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இறுதி சுற்றில் பங்கேற்ற போட்டியாளர்கள் செவர்லே போல்ட் மற்றும் டெஸ்லா மாடல்  X ஆகும்.

2017 world green car of the year