ஜீப் எஸ்யூவிகள் செரோக்கீ , SRT, ரேங்லர் விற்பனைக்கு வந்தது

0

பிரசத்தி பெற்ற வரலாற்று சிறப்புமிக்க ஜீப் எஸ்யூவிகள் செரோக்கீ , SRT மற்றும் ரேங்லர் மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜீப் கிராண்ட் செரோக்கீ எஸ்ஆர்டி பெர்ஃபாமென்ஸ் ரக மாடலும் விற்பனைக்கு வந்துள்ளது.

jeep-suv-launched-in-india

Google News

இந்தியாவில் முதற்கட்டமாக டெல்லி மற்றும் அகமதாபாத்தில் மட்டும் டீலர்களை திறந்துள்ள ஜீப் அக்டோபர் இறுதிக்குள் சென்னை மற்றும் மும்பையிலும் தொடங்க உள்ளது. ஆண்டின் இறுதிக்குள் பெங்களூரு , ஹைத்திராபாத் , சண்டிகர் மற்றும் கோச்சி போன்ற பகுதிகளில் விற்பனை மையங்களை திறக்க திட்டமிட்டுள்ளது.

அதிக வீல்பேஸ் கொண்ட 4 கதவுகளை பெற்றுள்ள ஜீப் ரேங்கலர் அன்லிமிடேட் மாடல் 197 bhp ஆற்றலை வழங்கும் 2.8 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கும். இதில 5 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது.

கிராண்ட் செரோக்கீ எஸ்யூவி மாடலில் எஸ்ஆர்டி உள்பட லிமிடேட் , சம்மீட் என மொத்தம் மூன்று விதமான வேரியண்ட்களில் வெளியாகியுள்ளது.

செரோக்கீ எஸ்ஆர்டி 475 hp ஆற்றலை வழங்கும் 6.4 லிட்டர் வி8 பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 624Nm ஆகும். இதில் 4 வீல்களுக்கும் ஆற்றலை எடுத்து செல்லும் குவாட்ரா ட்ராக் ஏக்டிவ் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் உள்ளது. இதில் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.  இந்த என்ஜினில் ஈக்கோ மோட் வாயிலாக சிறப்பான எரிபொருள் சிக்கனத்தினை பெற இயலும்.

0 முதல் 100 கிமீ வேகத்தினை 5 விநாடிகளில் எட்டும் . கிராண்ட் செரோக்கீ எஸ்ஆர்டி உச்ச வேகம் மணிக்கு 257 கிமீ ஆகும்.

jeep-grand-cherokke-srt

செரோக்கீ  லிமிடேட்  மற்றும் சம்மீட் வேரியண்டில் 240 hp ஆற்றலை வழங்கும்  3.0 லிட்டர் வி6 டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 570 Nm ஆகும். இதில் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

மூன்று வேரியண்ட்களுமே 4 வீல்களுக்கும் ஆற்றலை எடுத்து செல்லும் குவாட்ரா ட்ராக்  II  ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் உள்ளது.

முதற்கட்டமாக அமெரிக்கவிலிருந்து இறக்குமதி செய்யப்பட உள்ள ஜீப் எஸ்யூவி கார்கள் அடுத்த வருடத்தின் மத்தியிலிருந்து இந்தியாவிலே உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. குறைந்த விலையில் எதிர்பார்க்கப்படும் ஜீப் சி எஸ்யூவி காரும் அடுத்த ஆண்டில் விற்பனைக்கு வரலாம். தற்பொழுது விற்பனைக்கு வந்துள்ள செரோக்கீ , SRT மற்றும் ரேங்லர் மாடல்களின் பெட்ரோல் வேரியண்ட் வருடத்தின் இறுதியில் விற்பனைக்கு வரலாம்.

ஜீப் எஸ்யூவிகள் விலை பட்டியல்

Jeep Wrangler Unlimited 2.8 CRD: ரூ. 71.59 லட்சம்

Jeep Grand Cherokee Limited: ரூ. 93.64 லட்சம்

Jeep Grand Cherokee Summit: ரூ. 1.03 கோடி

Jeep Grand Cherokee SRT: ரூ. 1.12 கோடி

(அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை )

jeep-wrangler