ஜீப் காம்பஸ் எஸ்யூவி அறிமுகம்

இந்திய சந்தையில் விற்பனைக்கு வரவுள்ள ஜீப் காம்பஸ் எஸ்யூவி மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜீப் காம்பாஸ் எஸ்யூவி மாடலில் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் ஆப்ஷனில் கிடைக்க உள்ளது.

ஜீப் காம்பஸ் எஸ்யூவி

  • மிகவும் கம்பீரமான தோற்ற அமைப்பை பெற்ற ஸ்டைலிசான மாடலாக காம்பஸ் எஸ்யூவி விளங்குகின்றது.
  • 50 க்கு அதிகமாக பாதுகாப்பு அம்சங்களை பெற்ற மாடலாக விளங்குகின்றது.
  • 160 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் பெட்ரோல் எஞ்சின் ,  170 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் டீசல் எஞ்சினும் இடம்பெற்றுள்ளது.

சர்வதேச அளவில் 25.7 மில்லியன் கிமீ தொலைவு ஆன்ரோடு மற்றும் ஆஃப்ரோடு சோதனைகள் செய்யப்பட்டுள்ள காம்பஸ் மாடல் இந்தியாவில் உள்ள ஃபியட் ஃபியட் நிறுவனத்தின் இராஞ்சகவுன் ஆலையில் தயரிக்கப்பட உள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ள காம்பஸ் வலது பக்க டிரைவிங் முறை உள்ள நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. ஜீப் பிராண்டின் முதல் மேட் இன் இந்தியா மாடலாக காம்பஸ் விளங்கும்.

டிசைன்

கிராண்ட் செரோக்கீ மாடலின் மினி எஸ்யூவி போல காட்சியளிக்கும் காம்பஸ் எஸ்யூவி மாடலில் ஜீப் பிராண்டின் பாரம்பரிய 7 பிரிவுகளை கொண்ட கம்பீரமான கிரிலை பெற்ற முகப்புடன்  ஸெனான் முகப்பு விளக்குகளுடன் இணைந்த பகல் நேரத்தில் எரியும் எல்இடி விளக்குகள் பெற்று வட்ட வடிவ பனி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.

பக்கவாட்டில் மிக சிறப்பான புராஃபைல் கோடுகளுடன், அகலமான வீல் ஆர்ச், அலாய் வீல் போன்றவற்றுடன் பின்புறத்தில் எல்இடி டெயில் விளக்குகளை பெற்று விளங்குகின்றது.

  • Length: 4,398 mm
  • Width: 1,819 mm
  • Height:1,667 mm
  • Wheelbase: 2,636 mm
  • Ground clearance: 178 mm

இன்டிரியர்

கிராண்ட் செரோக்கீ காரின் இன்டிரியர் டிசைன் தாத்பரியங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள கேபினில் பல்வேறு விதமான சிறப்பு வசதிகள்  7 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கீலெஸ் என்ட்ரி, எஞ்சின் ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் பொத்தான், உயர்தர லெதர் இருக்கைகள் மற்றும் அப்ஹோல்ஸ்ட்ரியை பெற்றதாக இருக்கும்.

காம்பஸ் எஞ்சின் விபரம்

காம்பாஸ் எஸ்யூவி மாடலில் 160 ஹெச்பி ஆற்றலுடன் 350 என்எம் டார்க்கினை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் மல்டிஜெட் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 170 ஹெச்பி பவருடன்,  260 என்எம் டார்க்கினை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் மல்டிஏர் பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றுள்ளது.

இதில் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக டூயல் கிளட்ச் கியராபாக்ஸ் இடம்பெற்றுள்ளது. 4×4 டிரைவ் , 4×2 டிரைவ் என இருவிதமான வகைகளில் கிடைக்க உள்ளது.

பாதுகாப்பு அம்சம்

50 க்கு அதிகமான பாதுகாப்பு அம்சங்களை பெற்றுள்ள காம்பஸ் எஸ்யூவி மாடலின் அனைத்து வேரியன்டிலும் இரண்டு முன்பக்க காற்றுப்பைகள் , ஏபிஎஸ் ,இபிடி , எல்க்டாரானிக் ஸ்டெப்பிளிட்டி கன்ட்ரோல், அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக், ஹீல் அசிஸ்ட் கன்ட்ரோல் போன்றவை இணைக்கப்பட்டிருப்பதுடன் கூடுதலாக 4×4 டிரைவ் கொண்ட மாடலில் 6 காற்றுப்பைகள் இணைக்கப்பட்டிருக்கும்.

சிறப்பம்சங்கள்

சர்வதேச மாடல்களுக்கு இணையான தரத்திலே தயாரிக்கப்பபட உள்ள புதிய காம்பஸ் எஸ்யூவி மாடலில் 7 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே , நேவிகேஷன், கீலெஸ் என்ட்ரி, எஞ்சின் ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் பொத்தான், 6 காற்றுப்பைகள் , ஏபிஎஸ், இபிடி , இஎஸ்சி என பலவற்றை பெற்றிருப்பதுடன் 4 வீல் டிரைவ் மற்றும் 2 வீல் டிரைவ் போன்றவற்றை பெற்றதாக விளங்குகின்றது.

போட்டியாளர்கள்

ஹூண்டாய் டூஸான், ஹோண்டா சிஆர்-வி , எக்ஸ்யூவி500 போன்ற மாடல்களுக்குநேரடி போட்டியாகவும் , ஃபார்ச்சூனர், எண்டேவர், பஜரோ போன்றவற்றுக்கும் சவாலாக காம்பாஸ் எஸ்யூவி விளங்கும்.

விலை

காம்பஸ் எஸ்யூவி காரின் விலை பற்றி எந்த தகவலும் அறிவிக்கப்படவில்லை. எதிர்பார்க்கப்படுகின்ற விலை ரூ. 18 லட்சம் முதல் தொடங்கி ரூ.22 லட்சத்தில் நிறைவடையலாம்.

வருகை

இந்தியாவில் ஜீப் காம்பஸ் எஸ்யூவி மாடல் ஜூன் மாத இறுதியில் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

JEEP Compass Image Gallery

jeep compass details in tamil

Recommended For You