டட்சன் கோ , கோ ப்ளஸ் ஸ்டைல் எடிஷன் அறிமுகம்

0

தோற்ற மாற்றங்களுக்கான கூடுதல் துனை கருவிகள் மற்றும் புதிய நீல நிறத்திலும் வெளிவந்துள்ள  டட்சன் கோ , கோ ப்ளஸ் ஸ்டைல் எடிஷனில் இஞ்ஜின் ஆற்றல் மாற்றங்கள் இல்லை.

Datsun-Go-Plus-Style-Edition

Google News

சிறப்பு ஸ்டைல் பதிப்பில் புதிய நீல வண்ணத்தை பெற்று கோ ஸ்டைல் எடிசன் விலை ரூ.4.07 லட்சம் மற்றும் கோ + கார் விலை ரூ. 4.78 லட்சம் ஆகும் (எக்ஸ்ஷோரூம் டெல்லி). நீல வணத்தை தவிர வெள்ளை மற்றும் ரபி நிறத்திலும் கிடைக்கும்.

கோ , கோ ப்ளஸ் ஸ்டைல்

இரு மாடல்களிலும் ரூஃப் ரெயில்கள் , ரியர் ஸ்பாய்லர் , கருப்பு மற்றும் மஞ்சள் கலந்த ஸ்டைல் பாடி கிராபிக்ஸ் , க்ரோம் புகைப்போக்கி டிப் மற்றும் வரையறுக்கப்பட்ட ஸ்டைல் பேட்ஜ் போன்றவற்றை பெற்றுள்ளது.

Datsun-Go-Style-Edition

கோ, கோ ப்ளஸ் ஸ்டைல் உட்புறத்தில் கருப்பு மற்றும் பீஜ் என இரு வண்ண கலவையிலான டேஸ்போர்டு , பியானோ கருப்பு சென்ட்ரல் கன்சோல் மற்றும் சில்வர் இன்ஷர்ட்களை பெற்றுள்ளது. வண்ணங்களில் இருக்கை கவர் மற்றும் மேட் உள்ளது.

கோ , கோ ப்ளஸ் இஞ்ஜின்

இருமாடல்களிலும் 67 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் எனப்படும் டார்க் 104 Nm ஆகும்.இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ்பயன்படுத்தப்பட்டுள்ளது. கோ கார் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 20.62 கிலோமீட்டர் ஆகும். கோ ப்ளஸ் கார் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 20.6 கிலோமீட்டர் ஆகும்.

Datsun-Go-Style-edition-interior

வரவுள்ள பண்டிகை காலத்தை எதிர்கொள்ளும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ள சிறப்பு எடிசன் டட்சன் பிராண்டுக்கு நல்ல வரவேற்பாக அமையலாம். ரெடி-கோ கார் சிறப்பான வரவேற்பினை பெற்று விளங்குகின்றது.