டட்சன் ரெடி-கோ ஸ்போர்ட் விற்பனைக்கு வந்தது

0

சமீபத்தில் விற்பனைக்கு வந்த டட்சன் ரெடி கோ காரின் சிறப்பு பதிப்பாக பண்டிகை காலத்தை ஒட்டி டட்சன் ரெடி-கோ ஸ்போர்ட் எடிசன் மாடல் ரூ.3.49 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரெடி கோ ஸ்போர்ட் காரில் கூடுதலான வசதிகள் மற்றும் தோற்றத்தில் பாடி கிட்கள் போன்றவற்றை பெற்று இன்ஜின் ஆப்ஷனில் எவ்விதமான மாற்றங்களும் இல்லாமல் வந்துள்ளது. டாப் வேரியன்டான எஸ் வேரியன்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரெடி-கோ ஸ்போர்ட் தோற்றத்தில் ரேசிங் ஸ்டிரைப் கொண்ட ஸ்டிக்கர் , கூறையில் பொருத்தப்பட்ட ரியர் ஸ்பாய்லர் , சிவப்பு அசென்ட் கொண்ட கிரில் ,கன்மெட்டல் பினிஷ் கொண்ட கிரில் மற்றும் கருப்பு நிற பூச்சு கொண்ட வீல் கவர் பெற்றுள்ளது. ரெடி-கோ ஸ்போர்ட் சிவப்பு , வெள்ளை மற்றும் கிரே ஆகிய வண்ணங்களில் கிடைக்கும்.

Google News

இன்டிரியரில் கருப்பு வண்ண தோற்றத்துடன் கலந்த சிவப்பு நிற ஸ்டிச்சிங் மற்றும் சிவப்பு நிற அசென்ட்ஸ் பெற்று விளங்குகின்றது. மேலும் ரிமோட் கீலெஸ் என்ட்ரி , பூளூடூத் போன் தொடர்பு , எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குள் , ரியர் பார்க்கிங் சென்சார் மற்றும் ஒட்டுநருக்கான காற்றுப்பை பெற்றுள்ளது.

54 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 799 சிசி பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது . இதன் டார்க் 74 Nm ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம் பெற்றுள்ளது.

டட்சன் ரெடி-கோ ஸ்போர்ட் எடிசன் மாடல் ரூ.3.49 லட்சம் (எக்ஸ்ஷோரூம் டெல்லி)