டாடா சஃபாரி ஸ்ட்ராம் வேரிகோர் 400 விற்பனைக்கு வந்தது

டாடா சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவி காரில் கூடுதல் ஆற்றல் மற்றும் டார்க் வழங்கும் வேரிகோர் 400 என்ஜின் பொருத்தப்பட்ட சஃபாரி ஸ்ட்ராம் ரூ.13.25,530 லட்சம் விலை { எக்ஸ்ஷோரூம் டெல்லி } விற்பனைக்கு வந்தது.

Tata-Safari-Storme

புதிய வேரிக்கோர் 400 என்ஜின் VX  வேரியண்டில் மட்டுமே பொருத்தப்பட்டிருக்கும் மற்ற வேரியண்ட்களில் விற்பனையில் உள்ள 148பிஎச்பி ஆகும். இதன் முறுக்கு விசை 320என்எம் ஆகும். 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.

154.8 பிஹெச்பி ஆற்றல் மற்றும் 400 என்எம் டார்க் வழங்கும் வேரிகோர் 400 2.2 லிட்டர் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்ட உள்ளது.  இதில் 6 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தியுள்ளனர்.

200மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட சஃபாரி ஸ்ட்ராம் கார் 0 – 100 கிமீ வேகத்தை எட்டுவதற்க்கு 13 விநாடிகள் எடுத்துக்கொள்ளும். லிட்டருக்கு 13.9 கிமீ (ARAI) மைலேஜ் தரும். இதில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள எலக்ட்ரானிக் ஷிஃப்ட் ஆன் ஃபிளை வீல் (ESOF -Electronic Shift on-Fly ) சிறப்பானதாக இருக்கும். மேலும் ஏபிஎஸ் , இபிடி போன்ற பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

கனெக்ட்நெக்ஸ்ட் இன்ஃபோடெயின் அமைப்பு உள்ளது. இதில் யூஎஸ்பி , ஆக்ஸ் , ஐபாட் பூளூடூத் போன்றவற்றின் தொடர்புகளை ஏற்படுத்தி கொள்ள இயலும். மேலும் அல்ட்ராசோனிக் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் உள்ளது.

மேம்படுத்தப்பட்ட டாடா சஃபாரி ஸ்ட்ராம் காரில் எந்த மாற்றங்களும் இல்லை. வேரிகோர் 400 பேட்ஜ் மட்டுமே பின்புறம் இருக்கும்.

டாடா சஃபாரி ஸ்ட்ராம் வேரிகோர் 400 விலை

சஃபாரி ஸ்ட்ராம் VX 4×2 – ரூ. 13,25,530

சஃபாரி ஸ்ட்ராம் VX 4×4 – ரூ. 14,59,952

{ அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை விபரம் }

Tata Safari Storme Varicor 400 launched details