டாடா டியாகோ விலை ரூ.3.30 லட்சத்தில் தொடக்கம்

0

ரூ.3.30 லட்சம் தொடக்க விலையில் டாடா டியாகோ கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மிக சிறந்த வடிவ தாதபரியங்களுடன் சிறப்பான மாடலாக டியாகோ சவாலான விலையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

டாடா  டியாகோ காரில் ரெவோட்ரான் மற்றும் புதிய ரெவோடார்க் என்ஜின்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சிறப்பான செயல்திறன் , இருவிதமான டிரைவிங் மோட் , அதிகப்படியான மைலேஜ் போன்வற்றை தரவல்லதாகும். இவை இரண்டுமே டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாகும்.

70hp ஆற்றலை வழங்கும் புதிய 1.05 லிட்டர் ரெவோடார்க் என்ஜின் டார்க் 140Nm ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

டாடா போல்ட் , ஸெஸ்ட் கார்களில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே 1.2 லிட்டர் ரெவோட்ரான் என்ஜின் ஆற்றல் 83hp மற்றும் டார்க் 114Nm ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

டாடா டியாகோ டீசல் கார் மைலேஜ் லிட்டருக்கு 27.28 கிமீ மற்றும் டியாகோ பெட்ரோல் கார் மைலேஜ் லிட்டருக்கு 23.84 கிமீ ஆகும்.

இம்பேக்ட் டிசைன் மொழியின் தாத்பரியத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள டியாகோ மற்ற டாடா கார்களில் இருந்து வித்தியாசப்பட்டு இளம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. உட்புறத்தில் பல நவீன வசதிகளை பெற்றுள்ளது.

XE , XM மற்றும் XT போன்ற வேரியண்ட்களில் முன்பக்க இரு காற்றுப்பைகள் , ஏபிஎஸ் , இபிடி , இருக்கை பட்டை நினைவுபடுத்துதல் போன்றவற்றை ரூ.18,000 கூடுதலாக செலுத்தி பெறலாம்.

டாடா டியாகோ கார் விலை

  •  Tiago XB – ரூ. 3.30 லட்சம்
  • Tiago XE – ரூ. 3.70 லட்சம்
  •  Tiago XM – ரூ. 3.96 லட்சம்
  • Tiago XT – ரூ. 4.26 லட்சம்
  • Tiago XZ – ரூ. 4.83 லட்சம்

டீசல்

  • Tiago XB – ரூ. 4.06 லட்சம்
  • Tiago XE – ரூ. 4.41 லட்சம்
  • Tiago XM – ரூ. 4.77 லட்சம்
  • Tiago XT – ரூ. 5.08 லட்சம்
  • Tiago XZ – ரூ. 5.63 லட்சம்

{ அனைத்தும் சென்னை எக்ஸ்ஷோரூம் விலை }