டாடா போல்ட் கார் அறிமுகம்

டாடா போல்ட் ஹேட்ச்பேக் காரை ரூ.4.43 லட்சத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. சிறப்பான விலையை கொண்டுள்ளதால் மிகுந்த வரவேற்பினை போல்ட் கார் பெற்றுள்ளது.

கார் சந்தையில் வலுவற்ற நிலையில் இருந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்க்கு ஜெஸ்ட் செடான் கார் மூலம் புத்துணர்ச்சி பெற்றது . அதனை தொடர்ந்து ஜெஸ்ட் காரின் அடிப்படையான போல் மாடல் மிக சிறப்பான அடி தளத்தினை டாடா மோட்டர்ஸ்க்கு அமைத்து கொடுக்க உள்ளது.

டாடா போல்ட் அறிமுகம்

டாடா போல்ட் ஹேட்ச்பேக் காரில் பல நவீன வசதிகள் கொண்ட மிக சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தக்கூடிய காராக விளங்கும்.

மொத்தம் நான்கு வேரியண்டில் விற்பனைக்கு வந்தள்ள போல்ட் காரின் வேரியண்ட் விபரம் எக்ஸ்இ பேஸ் மாடல், எக்ஸ்எம், எக்ஸ்எம்எஸ் மற்றும் டாப் மாடல் எக்ஸ்டி ஆகும்.

5 வண்ணங்களில் டாடா போல்ட் கிடைக்கும். அவை ஸ்கை கிரே, வெனிட்டேன் சிகப்பு, பிரிஸ்டீன் வெள்ளை, பிளாட்டினம் சில்வர் மற்றும் டூன் பீயோஜ் வண்ணங்களில் கிடைக்கும்.

டாடா போல்ட் கார் சிறப்புகள்

போல்ட் காரில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் விற்பனைக்கு வந்துள்ளது. பெட்ரோல் மாடல் காரில் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜினும் டீசல் மாடல் காரில் 1.3 லிட்டர் குவாட்ராஜெட் என்ஜினும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ரெவோட்ரான் என்ஜின்

போல்ட் காரில் பொருத்தப்பட்டுள்ள ரெவோட்ரான் 1.2 லிட்டர் என்ஜின் 89பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தகூடியதாகும். இதன் முறுக்கு விசை 140என்எம் ஆகும். 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
ஈக்கோ , சிட்டி மற்றும் ஸ்போர்ட் என மூன்று விதமான வகையில் இயக்கலாம் என்பதால் மிக சிறப்பான செய்திறனை போல்ட் வெளிப்படுத்தும்.
ஈக்கோ மோடில் சிறப்பான மைலேஜ் கிடைக்க பெறும்.
சிட்டி மோடில் வாகனத்தை இயக்கும் பொழுது மைலேஜ் மற்றும் கூடுதலான செயல்திறனை வெளிப்படுத்தும்.
ஸ்போர்ட் மோடில் போல்ட் காரை இயக்கினால் மிகவும் சிறப்பான செயல்திறன் கிடைக்கும்.
போல்ட் டீசல் என்ஜின்

ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் குவாட்ராஜெட் (மல்டிஜெட்) என்ஜின் போல்ட் காரில் பயன்படுத்தியுள்ளனர் இதன் ஆற்றல் 74பிஎச்பி மற்றும் டார்க் 190என்எம் வெளிப்படுத்தும். 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
வெளிதோற்றம்

வெளி கட்டமைப்பில் ஜெஸ்ட் காரின் முகப்பில் மாற்றங்கள் இல்லை. மேலும் ஜெஸ்ட் செடான் என்பதால் பூட் உள்ளது போல்ட் காரில் பூட் இல்லாமல் இருக்கின்றது. முகப்பு கிரில் நேர்த்தியாக உள்ளது , புரோஜெக்டர் முகப்பு விளக்குகள் , பின்புற டெயில் விளக்குகள், பனி விளக்குகள், ஆலாய் வீல்கள் போன்றவை சிறப்பாக உள்ளது.
உட்புற தோற்றம்

உட்புற தோற்றத்தில் சிறாப்பாக டாடா மேம்படுத்தியுள்ளது. அதிகப்படியான இடவசதி உள்ளதால் மிகவும் இயல்பாக அமரக்கூடிய வகையில் உள்ளது. மேலும் பல நவீன வசதிகளை இணைத்துள்ளது குறிப்பாக ஹார்மேன் தொடுதிரை அமைப்பு, நேவிகேஷன் அமைப்பு , வீடியோ, ஆடியோ அலைபேசி இணைப்பு, குறுஞ்செய்தி படிக்க போன்ற பல வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு வசதிகள்

போல்ட் டாப் மாடலான எக்ஸ்டி  பாதுகாப்பு அம்சங்களுக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.  9வது தலைமுறை போஸ் ஏபிஎஸ் பிரேக், இபிடி அமைப்பு , இரண்டு காற்றுப்பைகள், சிஎஸ்இ (Corner Stability Control) போன்றவற்றை பெற்றுள்ளது.
பாடி கிட்ஸ்
போல்ட் காருக்கு பாடி கிட்ஸ்கள் முகப்பு லிப் ஸ்பாய்லர், பக்கவாடில் ஸ்கர்ட், பின்புறத்தில் ரேலி டிஃப்யூசர் போன்றவை சேர்த்துள்ளது. இந்த பாடி கிட்கள் டீலர்களிடம் கூடுதலான விலை கொடுத்து பெற்று கொள்ளலாம்.
டாடா போல்ட் கார் மைலேஜ்

டாடா போல்ட் பெட்ரோல் கார் மைலேஜ் லிட்டருக்கு 17.57கிமீ கிடைக்கும்.
டாடா போல்ட் டீசல் கார் மைலேஜ் லிட்டருக்கு 22.53 கிமீ கிடைக்கும்.

டாடா போல்ட் கார் விலை விபரம் (ex-showroom chennai)

போல்ட் பெட்ரோல் மாடல் விலை விபரம்

எக்ஸ்இ – 4.43 லட்சம்

எக்ஸ்எம் – 5.15 லட்சம்

எக்ஸ்எஸ் – 5.39 லட்சம்

எக்ஸ்டி – 6.07 லட்சம்

போல்ட் டீசல் மாடல் விலை விபரம்

எக்ஸ்இ – 5.55 லட்சம்

எக்ஸ்எம் – 6.15 லட்சம்

எக்ஸ்எஸ் – 6.38 லட்சம்

எக்ஸ்டி – 7.05 லட்சம்

 ஆட்டோமொபைல் தமிழன் (AMTபரிந்துரை
டாடா போல்ட் கார் சிறப்பான பல வசதிகள் கொண்ட காராக விளங்குகின்றது. டாப் மாடலில் பாதுகாப்பு அமசங்கள் மற்றும் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தக்கூடிய காராக போல்ட் விளங்குகின்றது. தாராளமாக டாடா போல்ட் காரை வாங்கலாம்.
Exit mobile version