டொயோட்டா இனோவா டூரிங் ஸ்போர்ட் விற்பனைக்கு வந்தது

0

இந்தியாவின் பிரபலமான எம்பிவி கார்களில் ஒன்றான இனோவா க்ரிஸ்டா காரின் தோற்ற அமைப்புகளில் கூடுதல் வசதிகளுடன் டொயோட்டா இனோவா டூரிங் ஸ்போர்ட் ரூபாய் 17.79 லட்சத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

toyota innova touring sport

டொயோட்டா இனோவா டூரிங் ஸ்போர்ட்

  • பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு எஞ்சின் ஆப்ஷன்களிலும் கிடைக்க உள்ளது.
  • ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் இரண்டு கியர்பாக்ஸூடனும் வந்துள்ளது.
  • 7  கேப்டன் இருக்கை கொண்ட டாப் ZX வேரியன்டில் மட்டுமே கிடைக்க உள்ளது.

toyota innova touring sport front

150hp ஆற்றலை வெளிப்படுத்தும் 2.4 லிட்டர் என்ஜின் டார்க் 343 Nm ஆகும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. 2.4 லிட்டர் இன்னோவா டூரிங் ஸ்போர்ட் மைலேஜ் லிட்டருக்கு 15.10 கிமீ ஆகும்.

174hp ஆற்றலை வெளிப்படுத்தும் 2.8 லிட்டர் என்ஜின் டார்க் 360 Nm ஆகும். இதில்  6 வேக ஆட்டோமேட்டிக் இடம் பெற்றிருக்கும். 2.8 லிட்டர் இன்னோவா டூரிங் ஸ்போர்ட் மைலேஜ் லிட்டருக்கு 14.29 கிமீ ஆகும்.

166 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 2.7 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் டார்க் 245Nm ஆகும். இதில் 6 வேக ஆட்டோமேட்டிக் அல்லது 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும். இன்னோவா ஆட்டோமேட்டிக் மைலேஜ் லிட்டருக்கு 10.83 கிலோமீட்டர் இன்னோவா பெட்ரோல் மெனுவல் 9.89 கிலோமீட்டர் ஆகும்.

toyota innova touring sport dashboard

சாதாரன இன்னோவா காருக்கும் இந்த காருக்கும் என்ன வித்தியாசம்

வெள்ளை மற்றும் சிவப்பு வண்ணங்களில் மட்டுமே கிடைக்க உள்ள இந்த மாடல்சாதரன மாடலை காட்டிலும் சிறப்பான ஸ்போர்ட்டிவ் தோற்ற பொலிவினை வெளிப்படுத்தும் வகையிலே அமைந்துள்ளது.  குறிப்பாக பாடி கிளாடிங் , பரவலாக முன் மற்றும் பின்புறங்களில் க்ரோம் பூச்சு , கருப்பு நிற டெயில் மற்றும் அலாய் வீல் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.

இன்டிரியர் அமைப்பில் 7 கேப்டன் இருக்கை கொண்ட மாடலில் மட்டுமே கிடைக்க உள்ள இனோவா டூரிங் ஸ்போர்ட் மாடலில் கருப்பு நிற லெதர அப்ஹோல்ஸ்ட்ரி , கிளஸ்ட்டரில் சிவப்பு நிறம் , சிவப்பு நிற ஸ்டிச்சிங் போன்ற மாற்றங்களை பெற்றுள்ளது.

மேலும் படிக்க – இனோவா க்ரீஸ்டா

இனோவா டூரிங் ஸ்போர்ட் விலை பட்டியல் அட்டவனை

 

வேரியன்ட் பெட்ரோல் டீசல்
இனோவா டூரிங் ஸ்போர்ட் மேனுவல் ரூ.17,79,000 ரூ.18,91,000
இனோவா டூரிங் ஸ்போர்ட் ஆட்டோமேட்டிக் ரூ. 20,84,500 ரூ.22,15,500

டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை