நிசான் டெரானோ க்ரூவ் சிறப்பு பதிப்பு அறிமுகம்

0
நிசான் டெரானோ எஸ்யூவி காரின் வரையறுக்கப்பட்ட சிறப்பு பதிப்பாக டெரானோ க்ரூவ் என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நிசான் டெரானோ suv

நிசான் டெரானோ க்ரூவ் எடிசனில் 250 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது. டெரோனோ XL (O) வகையில் சில கூடுதலான துணைக் கருவிகளை மட்டும் இணைக்கப்பட்டுள்ளது.

க்ரூவ் பதிப்பு

முகப்பில் பனி விளக்கு அறை , பின்புற விளக்குகள் , மற்றும்  பின்புற கதவின் விளிம்பு போன்றவற்றில் குரோம் பூச்சால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேற்கூரையில் கருப்பு நிறத்தினை பூசியுள்ளனர். இதனால் இரட்டை வண்ணத்தில் டெரானோ காட்சியளிக்கின்றது.

Google News
நிசான் டெரானோ க்ரூவ் சிறப்பு பதிப்பு

நிசான் டெரானோ க்ரூவ் சிறப்பு பதிப்பு

உட்ப்புறத்தில் டெரானோ பெயர் பொறிக்கப்பட்ட மதியடிகள் ,எல்இடி ஸ்க்ஃப் பட்டை  மற்றும் மிக சிறப்பான இசையை தரவல்ல ராக்ஃபோர்டு ஃபாஸ்கேட் ஸ்பீக்கர் தந்துள்ளனர். நிசான் டெரானோ க்ரூவ் எஸ்யூவி என்ஜினில் மாற்றங்கள் இல்லை.

நிசான் டெரானோ க்ரூவ் விலை விபரம்

நிசான் டெரானோ க்ருவ் விலை ரூ.11.45 லட்சம் (ex-showroom, Delhi)