புதிய ஆடி RS7 கார் விற்பனைக்கு அறிமுகம்

ஆடி RS7 சொகுசு காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் ரூ.1.4 கோடி விலையில் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2015 ஆடி RS7 காரில் தோற்றம் மற்றும் உட்ப்புறங்களில் சில மாற்றங்களை பெற்றுள்ளது.

ஆடி RS7 கார்

தோற்றம்

ஆர்எஸ்7 காரில் முகப்பு பம்பர் மற்றும் கிரில் தோற்றம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் முகப்பு எல்இடி விளக்குகள் புதுப்பிக்கப்பட்டு கருப்புவண்ண கிராஃபிக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் மேட்ரிக்ஸ் எல்இடி முகப்பு விளக்குகளை ஆப்ஷனலாக பெற்றுக் கொள்ளலாம்.

பின்புறத்தில் புதிய புகைப்போக்கி மற்றும் எல்இடி பின்புற விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 20 இஞ்ச் ஆலாய் வீல் மற்றும் 21 இஞ்ச் ஆலாய் வீல் என இரண்டு ஆப்ஷனில் கிடைக்கும்.

audi rs7

உட்ப்புறம்

மேம்படுத்தப்பட்ட இன்ஸ்டூருமென்டல் பேனலுடன் கூடிய ஏசி கட்டுப்பாடு , புதிய பேடல் ஸ்ஃப்ட்டர் ,  மற்றும் மேம்படுத்தப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு சேர்க்கப்பட்டுள்ளது.

ஆடி RS7 கார்

என்ஜின் 

 ஆடி ஆர்எஸ்7 காரில் 552பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 4.0 லிட்டர் வி8 டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 8 வேக தானியங்கி டிரான்ஸ்மிஷன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
0-100கிமீ வேகத்தினை எட்ட 3.9 விநாடிகள் எடுத்துக்கொள்ளும். ஆடி RS7 காரின் வேகம் மணிக்கு 255கிமீ ஆக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் விரும்பினால் வேக கட்டுப்பாட்டினை நீக்கி கொள்ளலாம். இதன் மூலம் உச்சகட்ட வேகம் மணிக்கு 305 கிமீ ஆகும்.
ஆடி ஆர்எஸ்7 விலை விபரம்
 ஆடி RS7 கார் விலை ரூ.1.4 கோடி (ex-showroom, Mumbai)