Automobile Tamil

புதிய கரோல்லா அல்டிஸ் வருகை விபரம்

மேம்படுத்தப்பட்ட புதிய டொயோட்டா கரோல்லா அல்டிஸ் செடான் காரின் நோற்ற அமைப்பில் சில மாற்றங்களுடன் கூடுதல் வசதிளை பெற்றதாக விற்பனைக்கு வரவுள்ளது.

புதிய கரோல்லா அல்டிஸ்

ரஷ்யா உள்பட பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யபட்டுள்ள 2017 அல்டிஸ் காரின் முன்புறத்தில் புதிய பம்பருடன் எல்இடி ரன்னிங் விளக்குகள் இணைந்த எல்இடி முன்பக்க விளக்குடன் வரவுள்ளது.

இன்டிரியரில் நவீன தலைமுறைக்கு ஏற்ற அம்சங்களாக ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆதரவினை பெற்றிருக்கூடிய 7 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் , டாப் வேரியண்டில் 6 காற்றுப்பைகள் உள்பட பல்வேறு வசதிகளை கொண்டதாக வரவுள்ளது.

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற கரோல்லா அல்டிஸ் காரில் இடம்பெற்றுள்ள என்ஜின் ஆப்ஷனில் எவ்விதமான ஆற்றல் மற்றும் டார்க் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இல்லாமல் இருக்கலாம்.

138 hp ஆற்றலுடன் 173 Nm டார்க்கினை வழங்கவல்ல திறன்பெற்ற 1.8 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் மற்றும் 87 hp  ஆற்றலுடன் 205 Nm டார்க்கினை வழங்கவல்ல 1.4 லிட்டர் டீசல் என்ஜினும் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற புதிய கரோல்லா காரின் போட்டியாளர்கள் ஹூண்டாய் எலன்ட்ரா மற்றும் ஸ்கோடா ஆக்டாவியா போன்ற மாடல்களாகும்.

 

Exit mobile version