Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

2017ல் வரவிருக்கும் புதிய கார்கள் – ஹேட்ச்பேக்

by MR.Durai
28 December 2016, 5:43 pm
in Car News
0
ShareTweetSend

வருகின்ற 2017 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரவுள்ள ஹேட்ச்பேக் ரக மாடல்களை பற்றி புதிய கார்கள் – 2017 பிரிவில் தெரிந்து கொள்ளலாம். முதன்முறை கார் வாங்க எண்ணுபவர்களுக்கு ஏற்றவையாக ஹேட்ச்பேக் பிரிவு விளங்குகின்றது.

மிக வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவின் ஆட்டோமொபைல் சந்தையில் புதிய வருடத்தில் பல புதிய கார்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட கார்கள் இவற்றையெல்லாம் விட அக்டோபர் 2017 முதல் நடைமுறைக்கு வரவுள்ள பாரத் கிராஷ் டெஸ்ட் பாதுகாப்பு விதிகளுக்கு ஏற்றதாக புதிய கார் மாடல்கள் அமைந்திருக்கும்.

1. 2017 மாருதி சுசூகி ஸ்விஃப்ட்

இந்தியாவின் முதன்மையான ஆட்டோமொபைல் தயாரிப்பாளராக விளங்கும் மாருதி சுசூகி நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற மாடலாகவும் இந்தியர்களின் மிக விருப்பமான காராகவும் விளங்கும் மாருதி ஸ்விஃப்ட் காரின் புதிய தலைமுறை மாடல் நவீன டிசைன் அம்சங்களுடன் , கூடுதல் வசதிகள் மற்றும் அடிப்படை பாதுகாப்பு அம்சங்களை பெற்ற மாடலாக வரவுள்ளது. மேலும் பலேனோ காரினை போல ஆர்எஸ் வேரியன்டிலும் வரவுள்ளது.

  • வருகை : ஜூலை 2017
  • என்ஜின் – 1.2 லிட்டர் பெட்ரோல் , 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் , 1.3 லிட்டர் டீசல்
  • கியர்பாக்ஸ் – 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி அல்லது சிவிடி கியர்பாக்ஸ்
  • விலை : ரூ. 4.75 லட்சத்தில் தொடங்கும்
  • போட்டியாளர்கள் : கிராண்ட் ஐ10 , பீட் , போல்ட்

2. புதிய செவர்லே பீட்

செவர்லே நிறுவனம் இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட பீட மாடலை வருகின்ற ஜனவரி மாத இறுதியில் விற்பனைக்கு கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தோற்ற அமைப்பில் சிறிய அளவிலான மாற்றங்களுடன் உட்புறத்தில் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் , நேவிகேஷன் போன்றவ வசதிகளை கொண்டதாக விளங்கும்.

 

  • வருகை : ஜனவரி 2017
  • என்ஜின் – 1.2 லிட்டர் பெட்ரோல் , 1.0 லிட்டர் டீசல்
  • கியர்பாக்ஸ் – 5 வேக மேனுவல்
  • விலை : ரூ. 4.50 லட்சத்தில் தொடங்கும்
  • போட்டியாளர்கள் : கிராண்ட் ஐ10 , ஸ்விஃப்ட் , போல்ட் , இக்னிஸ்

3. மாருதி பலேனோ ஆர்எஸ்

மாருதி சுஸூகி பலேனோ காரின் கூடுதல் ஆற்றலை வெளிப்படுத்தும் சக்திவாய்ந்த மாடலாக வரவுள்ள பலேனோ ஆர்எஸ் காரின் தோற்ற அமைப்பில் சிறிய மாறுதல்களை பெற்று சாதரன பலேனோ காரின் டேஸ்போர்டில் கூடுதலாக சில மாறுதல்களை பெற்றதாக விளங்கும். இதில் 112 குதிரைசக்தி 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் என்ஜின் பெற்றிருக்கும்.

  • வருகை : பிப்ரவரி 2017
  • என்ஜின் – 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் பெட்ரோல்
  • கியர்பாக்ஸ் – 5 வேக மேனுவல்
  • விலை : ரூ. 7 லட்சத்தில் தொடங்கும்
  • போட்டியாளர்கள் : அபாரத் புன்ட்டோ , போலோ ஜிடிஐ டிஎஸ்ஐ

4. ரெனோ க்விட் கிளைம்பர் & ரேஸர்

மாபெரும் வெற்றி பெற்ற ரெனோ க்விட் மாடலின் அடிப்படையில் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிக்கு வந்த கிளைம்பர் மற்றும் ரேஸர் கான்செப்ட் மாடல்களின் அடிப்படையில் சிறிய அளவிலான தோற்ற மாற்றங்களை பெற்ற மாடல்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

  • வருகை : ஆகஸ்ட் 2017
  • என்ஜின் – 1.0 லிட்டர் , 0.8 லிட்டர் பெட்ரோல்
  • கியர்பாக்ஸ் – 5 வேக மேனுவல்
  • விலை : ரூ. 3.50 லட்சத்தில் தொடங்கும்
  • போட்டியாளர்கள் : ரெடி-கோ, டியாகோ , செலிரியோ

5. டாடா டியோகோ ஏக்டிவ்

டாடா மோட்டார்சின் டியாகோ காரில் கூடுதல் ஆற்றலை வெளிப்படுத்தும் மாடலாக எதிர்பார்க்கப்படுகின்ற டியாகோ ஏக்டிவ் கார் சில கூடுதல் தோற்ற மாற்றங்களுடன் கூடுதல் ஆற்றலை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் டியாகோ காரில் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலும் வரவுள்ளது.

  • வருகை : மே 2017
  • என்ஜின் – 1.2 லிட்டர் பெட்ரோல்
  • கியர்பாக்ஸ் – 5 வேக மேனுவல்
  • விலை : ரூ. 4.50 லட்சத்தில் தொடங்கும்
  • போட்டியாளர்கள் : இக்னிஸ் , கேயூவி100

6.  2017 ஹூண்டாய் கிராண்ட் ஐ10

வெளிநாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட புதிய கிராண்ட் ஐ10 கார் இந்தியாவில் புதிய தோற்ற மாற்றங்கள் மற்றும் கூடுதல் வசதிகளை பெற்ற மாடலாக விளங்கும் வகையில் எதிர்பார்க்கப்படுகின்றது. என்ஜின் மற்றும் ஆற்றலில் பெரிதாக மாற்றங்கள் இருக்காது.

  • வருகை : அக்டோபர் 2017
  • என்ஜின் – 1.2 லிட்டர் பெட்ரோல் , 1.1 லிட்டர் டீசல்
  • கியர்பாக்ஸ் – 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி
  • விலை : ரூ. 5.50 லட்சத்தில் தொடங்கும்
  • போட்டியாளர்கள் : ஸ்விஃப்ட் , போல்ட் , போலோ

Related Motor News

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

mahindra be6 batman edition suv

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

renault bridger suv concept

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

நிசானின் மேக்னைட் விலை ரூ.32,000 வரை உயருகின்றது.!

ஹாரியர், சஃபாரியில் பெட்ரோல் என்ஜினை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

அடுத்த 18 மாதங்களில் 3 கார்களை வெளியிடும் நிசான் இந்தியா.!

நிசானின் புதிய எம்பிவி கிராவைட் ஜனவரி 2026ல் விற்பனைக்கு அறிமுகம்.!

மாருதி சுஸுகியின் வேகன்-ஆரில் ‘சுழலும் இருக்கை’ அறிமுகம்!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan