ஹோண்டாவின் புதிய சிட்டி கார் வசதிகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

ரூபாய் விலையில் ஹோண்டாவின் புதிய சிட்டி கார்  இந்தியாவில்  விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. 2017 சிட்டி காரில் தோற்ற மாற்றங்கள் மற்றும் கூடுதல் வசதிகளுடன் எஞ்சினில் எந்த மாற்றங்களும் இல்லாமல் வந்துள்ளது.

Honda City front

சமீபத்தில் தாய்லாந்து , மலேசியா போன்ற சந்தைகளில் விற்பனைக்கு வெளியிடப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் ஹோண்டா சிட்டி கார் டீலர்களிடம் வர தொடங்கி விட்டது. கூடுதலான வசதிகளுடன் எஞ்சின் பவரில் மாற்றங்கள் இல்லாமல் வரக்கூடும்.

2017 Honda City headlamps

 புதிய சிட்டி கார் விபரம்

1. டிசைன்

நவீன சிவிக் காரின் டிசைன் தாத்பரியங்களை பெற்று மிக நேர்த்தியான க்ரோம் பூச்சூ கிரிலை பெற்று அதன் மத்தியில் ஹோண்டா லோகோ பதிக்கப்பட்டுள்ளது.

புதிதாக இணைக்கப்பட்டுள்ள டாப் வேரியன்டில் மிக நேர்த்தியான எல்இடி ஹெட்லேம்ப்  , பகல் நேர ரன்னிங் எல்இடி விளக்குகள் , காரின் பக்கவாட்டில் முந்தைய 15 அங்குல அலாய் வீலுக்கு மாற்றாக புதிய வடிவம் கொண்ட 16 அங்குல அலாய் வீல் , நேர்த்தியாக மாற்றியமைக்கப்பட்ட முன் மற்றும் பின்புற பம்பர்களுடன் எல்இடி நிறுத்த விளக்கு அமைப்பினை பின்புறத்தில் பெற்று விளங்குகின்றது.

 

2017 honda city facelift

2. இன்டிரியர்

மேம்பாடுகளை கொண்ட இருக்கை மற்றும் டேஸ்போர்டில் புதிய 6.2 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே வசதிகளை கொண்டதாக விளங்குகின்றது.

2017 Honda City facelift dashboard

3. எஞ்சின்

சிட்டி காரில் இடம்பெற்றுள்ள 1.5 லிட்டர் டீசல் மற்றும் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களிலே பவர் மற்றும் டார்க் போன்றவற்றில் மாற்றம் இல்லாமல் தொடர உள்ளது.

4. புதிய வேரியன்ட்

தற்பொழுது கூடுதலாக புதிய ZX டாப் வேரியன்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.

2017 honda city facelift led taillamp

5. விலை

விற்பனையில் உள்ள சிட்டி காரை விட புதிய சிட்டி கார் ரூ.30,000 வரை கூடுதலான விலையில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. வருகின்ற பிப்ரவரி 14ந் தேதி விற்பனைக்கு வெளியிடப்படுகின்றது.

 

[foogallery id=”16453″]