புதிய டாடா இன்டிகோ இசிஎஸ்

0
டாடா மோட்டார்ஸ் ஒரே நாளில் 5 மாடல்களை மேம்படுத்தியும் 3 விதமான மாடல்களில் சிஎன்ஜி ஆப்ஷனையும் அறிமுகம் செய்தது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட டாடா இன்டிகோ இசிஎஸ் காரின் முழு விபரங்களை கானலாம்.

இன்டிகோ இசிஎஸ் டாக்ஸி சந்தையில் பெரும்பங்கு வகித்து வருகின்றது. தற்பொழுது மேம்படுத்தப்பட்ட இன்டிகோ இசிஎஸ்யில் உட்ப்புற கட்டமைப்பு மற்றும் தரத்தினை மேம்படுத்தியுள்ளது.

டாடா இன்டிகோ இசிஎஸ்

என்ஜினில் எவ்விதமான மாற்றங்களும் கிடையாது. 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு காமன்ரெயில் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் 70பிஎஸ் மற்றும் டார்க் 140என்எம் ஆகும்.
1.2 லிட்டர்  பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் 65பிஎஸ் மற்றும் டார்க் 100என்எம் ஆகும்.

பிஎஸ் 3 டீசல் என்ஜின் எல்எஸ் மற்றும் எல்எக்ஸ் வேரியண்ட்டில் மட்டும் கிடைக்கும். 1.4 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் 70பிஎஸ் மற்றும் டார்க் 135என்எம் ஆகும்.

புதிய முகப்பு கிரில், சுமோக்டு முகப்புவிளக்குகள், ரீஸ்டைல்டு முன்புற பம்பர் மற்றும் பனி விளக்குள், புதிய மல்டிஸ்போக் ஆலாய்வீல், ரியர் பார்க்கிங் சென்சார், குரோம் கார்னிஸ் போன்றவை கொண்டுள்ளது.

டாடா இன்டிகோ இசிஎஸ்

உட்ப்புற கட்டமைப்பில் பல மாற்றங்களை கொண்டுள்ளது. டூவல் டோன் இன்டிரியர், புதிய கருப்பு நிற டாஸ்போர்டு, சில்வர் கன்ஸோல் மற்றும் கிளாவ் பாக்ஸ் மேம்படுத்தப்பட்டுள்ளது.

கியர் ஸ்ஃப்ட்டிங் மிகவும் எளிமையாக மாற்றும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. மிக சிறப்பான பயண அனுபவத்தினை பெற முடியும்.

இன்டிகோ இசிஎஸ் விலை விபரம்(டெல்லி எக்ஸ்ஷோரூம்)

இன்டிகோ இசிஎஸ் பெட்ரோல் ரூ.4.78 லட்சம்

இன்டிகோ இசிஎஸ் டீசல் ரூ.6.03 லட்சம்