புதிய மாருதி டிசையர் கார் கலர்களில் ஒரு பார்வை

0

வருகின்ற மே 16ந் தேதி சந்தைக்கு வரவுள்ள மூன்றாம் தலைமுறை டிசையர் கார் டீலர்களை வந்தடைய தொடங்கியுள்ளதால் பரவலாக சமூக வலைதளங்களில் படங்கள் முழுமையாக வெளிவர தொடங்கி  உள்ளது.

new dzire

Google News

புதிய டிசையர் கலர்

முற்றிலும் மேம்படுத்தப்பட்ட புதிய டிசையர் கார் மொத்தம் 6 விதமான நிறங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.  புதிதாக சேர்க்கப்பட்ட நீலம், பிரவுன், சிவப்பு போன்ற மூன்று நிறங்கள் சில்வர், வெள்ளை மற்றும் கிரே போன்ற வண்ணங்களுடன் வரவுள்ளது.

2017 new dzire color lineup

dzire silver

2017 Maruti DZire Side Profile

டிசையர் எஞ்சின் விபரம்

1.2 லிட்டர் கே வரிசை பெட்ரோல் எஞ்சின் மாடலின் பவர் 82 ஹெச்பி வெளிப்படுத்துவதுடன் 113 என்எம் டார்க் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் மாருதியின் ஏஜிஎஸ் என அழைக்கப்படுகின்ற ஆட்டோமேட்டிக் மெனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

டிசையர் பெட்ரோல் கார் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 22 கிலோமீட்டர் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனில் 75 ஹெச்பி பவருடன் , 190 என்எம் டார்க் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  இதில் 5 வேக மேனுவல் மற்றும் மாருதியின் ஏஜிஎஸ் என அழைக்கப்படுகின்ற ஆட்டோமேட்டிக் மெனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

டிசையர் டீசல் கார் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 28.40 கிலோமீட்டர் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

dzire red

dzire grey

2017 Maruti Dzire base model

For more news from AutomobileTamilan, follow us on Twitter @automobiletamilan and on Facebook at facebook.com/automobiletamilan