புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ கிளாஸ் அறிமுகம்

0
மெர்சிடிஸ் பென்ஸ் இ கிளாஸ் காரின் மேம்படுத்தப்பட்ட இ கிளாஸ் விற்பனைக்கு வந்துள்ளது. நவீன நுட்பங்களுடன் வெளிவந்துள்ள இ கிளாஸ் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் கிடைக்கும். மேலும் வரையறுக்கப்பட்ட பதிப்பும் விற்பனைக்கு வந்துள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் இ கிளாஸ்

சிறப்பான பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் 8 காற்றுப்பைகள், பிரேக் உதவி, பார்க்கிங் உதவி போன்ற வசதிகளும் உள்ளன.

ஆக்டிவ் பானட், வுட் பினிஷ், நெப்பா லெதர் அப்ஹோல்ஸ்டரி, பனரோமிக் சன்ரூஃப் , புதிய டெயில் கிளஸ்ட்டர், அழகிய டேஷ்போர்டு வடிவமைப்பு, பல பயன் தரவல்ல ஸ்டீயரிங் வீல், கியர் ஷிப்ட் பேடில்,  ஸ்பிளிட் முகப்பு விளக்குகள், பகல் நேரங்களிலும் எரியும் விளக்குகள், புது விதமான கிரில் என இ கிளாஸ் பல வசதிகளுடன் மேம்படுத்தியுள்ளனர்.

ஈக்கோ நுட்பத்தினை பயன்படுத்தியுள்ளனர். இந்த நுட்பமானது மிக சிறப்பான முறையில் எரிபொருளை சிக்கனப்படுத்த உதவும். ஸ்டார் மற்றும் ஸ்டாப் செய்வது சுலபம்.

அவனத்கார்டே என்ற பெயரில் வரையறுக்கப்பட்ட பதிப்பு வெஇவந்துள்ளது இவற்றில் 100 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும்.

மெர்சிடிஸ் பென்ஸ் இ கிளாஸ் விலை விபரம்

பெட்ரோல் இ கிளாஸ்விலை ரூ.41.40 லட்சம்

டீசல் இ கிளாஸ் விலை ரூ.44.48 லட்சம்

அவனத்கார்டே லிமிடேட் எடிசன் டீசல் இ கிளாஸ் விலை ரூ.49.90 லட்சம்

மெர்சிடிஸ் பென்ஸ்