Automobile Tamil

புதிய வால்வோ XC90 எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்

மேம்படுத்தப்பட்ட வால்வோ XC90 எஸ்யூவி கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் தலைமுறை XC90 எஸ்யூவி சிறப்பான சொகுசு அம்சங்களை கொண்ட எஸ்யூவி காராக விளங்கும்.
வால்வோ XC90 எஸ்யூவி

12 ஆண்டுகளுக்கு பிறகு புதிய வால்வோ XC90 எஸ்யூவி கார் scalable product architecture platform என்ற தளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் உருவாகியுள்ள எக்ஸ்சி90 எஸ்யூவி மிரட்டலான முகப்பு தோற்றம் , அதிகப்படியான சொகுசு அம்சங்களை கொண்ட காராக விளங்குகின்றது.

என்ஜின்

வால்வோ XC90 எஸ்யூவி காரில் 225எச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 2.0 லிட்டர்  4 சிலிண்டர் D5 டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 470என்எம் ஆகும். 8 வேக தானியங்கி பரப்புகை பொருத்தியுள்ளனர். அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் ஹைபிரிட் பெட்ரோல் மாடல் வெளிவரலாம்.

தோர்ஸ் ஹேமர் வடிவம்

தோற்றம்

முகப்பு தோற்றம் மிக நேர்த்தியான வடிவமைப்பில் விளங்குகின்றது. பகல் நேர எல்இடி விளக்கு சுத்தி போன்ற அமைப்பில் விளங்குவதனால் இதனை “தோர்ஸ் ஹேமர்” என அழைக்கிறார்கள்.

பின்புற தோற்றத்தில் மேற்கூறை ஸ்பாய்லர் வரை இணைந்திருக்கும் பின்புற விளக்கு அமைப்பினை கொண்டுள்ளது.

வால்வோ எக்ஸ்சி90 எஸ்யூவி 4,950மிமீ நீளமும், 2008மிமீ அகலமும், 1,776மிமீ உயரமும் கொண்டது. இதன் வீல்பேஸ் 2,984மிமீ என்பதால் மிக அதிகப்படியான உட்ப்புற இடவசதியை வழங்குகின்றது.

XC90 காரின் அடிப்படை மொமண்டம் வேரியண்டில் 19இஞ்ச் ஆலாய் வீலும் டாப் வேரியண்ட் இன்ஸ்க்ரிப்ஷன் வேரியண்டில் 20 இஞ்ச் டைமன்ட் கட் ஆலாய் வீல் பயன்படுத்தியுள்ளனர்.

உட்ப்புறம்

வால்வோ கார்களிலே மிக சிறப்பான அதிகப்படியான சொகுசு வசதி கொண்ட முதல் காராக எக்ஸ்சி90 விளங்கும் என வால்வோ தெரிவித்துள்ளது.

7 இருக்கைகள் கொண்ட எக்ஸ்சி90 மரவேலைப்பாடுகளை கொண்ட உட்ப்புறம் மேலும் இருக்கை மற்றும் மேற்கூரை உட்ப்புறத்தில் நாப்பா வகை லெதர் பயன்படுத்தியுள்ளனர். 12.3 இஞ்ச் தொடுதிரை இன்ஸ்டூருமென்ட் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு விதமான வசதிகளை கொண்டுள்ளது. அவை சாவி இல்லா நுழைவு , பனாராமிக் சூரியகூறை , 19 ஸ்பீக்கர்களுடன் கூடிய போவர்ஸ் மற்றும் விங்க்ஸ் ஆடியோ அமைப்பு , டயர் காற்றழுத்த மானிட்டர் , பார்க்கிங் உதவி , மலை ஏற மற்றும் இறங்க உதவி  போன்றவை உள்ளன.

பாதுகாப்பு அம்சங்கள்

காற்றுப்பைகள் , இன்டலிஜென்ட் டிரைவர் சிஸ்டம் , மழையை உணர்ந்து செயல்படும் ஆன்டி லாக் பிரேக் சிஸ்டம் , உயரத்திற்க்கு ஏற்ப தானியங்கி முறையில் இருக்கை பட்டை பொருந்தும் வசதி போன்ற பல பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

வால்வோ எக்ஸ்சி90 விலை விபரம் (EX-showroom mumbai)

வால்வோ XC90 மொமண்டம் — ரூ.64.9 லட்சம்

வால்வோ XC90 இன்ஸ்க்ரிப்ஷன் — ரூ.77.9 லட்சம்

Volvo XC90 Suv launched in India priced at Rs. 64.9 lakhs Momentum trim and Inscription trim price Rs. 77.9 lakhs (ex-showroom mumbai without octrai)

Exit mobile version