மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-கிளாஸ் கோனெஸ்ஸர் சொகுசு கார் அறிமுகம்

ரூபாய் 1.21 கோடி விலையில் மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-கிளாஸ் கோனெஸ்ஸர் சொகுசு கார் மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. S 350d மற்றும் S 400 என இரு விதமான வேரியண்ட்களில் வந்துள்ளது.

பென்ஸ் எஸ்-கிளாஸ் கோனெஸ்ஸர்

  • ரூ.1.21 கோடி ஆரம்ப விலையில் எஸ்-கிளாஸ் கோனெஸ்ஸர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  • இரவு நேரங்களில் மிகச் சிறப்பான பாதுகாப்பு அம்சத்தை வெளிப்படுத்தும் நைட் வியூ அஸிஸ்ட் பிளஸ் வழங்கப்பட்டுள்ளது.
  • நைட் வியூ அசிஸ்ட் பிளஸ் சாலையில் எதிர்ப்படும் அனைத்தையும் உணர்ந்து ஒட்டுநருக்கு தகவலை வழங்கும்.

S கிளாஸ் கோனெஸ்ஸர்  ஆடம்பர காரின் எஞ்சின் விபரம்..

S 350d வேரியன்டில் 255 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும், 6 சிலிண்டர்களை பெற்ற 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.  S400 வேரியன்டில் 329hp ஆற்றலை வெளிப்படுத்தும், 6 சிலிண்டர்களை பெற்ற 3.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

இரவு நேர பயணங்களில் மிக சிறப்பாக வாகனத்தை இயக்கும் வகையில் உயர்ரக ஆடம்ப வசதிகளுடன் , அதிகபட்சமாக இரவில் விபத்தை தடுக்கும் வகையில் நைட் வியூ அசிஸ்ட் ப்ளஸ் என்ப்படுகின்ற நவீன தொழிற்நுட்ப அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.

நைட் வியூ அசிஸ்ட் பிளஸ் (Night View Assist Plus) என்றால் இரவு நேரங்களில் சாலைகளில் எதிர்ப்படுகின்ற பாதசாரிகள், விலங்குகள் மற்றும் பொருட்கள் என எவை குறுக்கிட்டாலும் , இந்த தொழில்நுட்பம் டேஸ்போர்டில் அமைந்துள்ள டிஸ்பிளேவில் காண உதவுவதனால் ஒட்டுநர் வாகனத்தை எளிதாக கையாளும் வகையில் உதவுகின்றது.

சாதரன எஸ் கிளாஸ் காரை விட கூடுதல் சொகுசு வசதியை பெற்றுள்ள இந்த மாடலில் ஒட்டுநர்  இருக்கைக்கு நேர் பின்னால் அமைந்துள்ள இருக்கையை 43.5 டிகிரி கோனம் வரை சாய்த்துக்கொள்ளலாம், இந்த வசதி சாதரன எஸ் கிளாஸ் மாடலில் 43.5 டிகிரி கோனம் வரை மட்டுமே அமைந்துள்ளது என்பது குறிப்படதக்கதாகும்.

காற்றில் கலந்து உள்ள ஐயன்களை தூய்மையாக காரினுள் தக்க வைத்துக்கொள்ளக்கூடிய ‘ஏர் பேலன்ஸ் பேக்கேஜ் என்ற நுட்பத்தை எஸ்-கிளாஸ் கோனெஸ்ஸர் ஆடம்பர மகிழுந்து பெற்றுள்ளது.

  • S 350d டீசல் மாடல் விலை ரூ.1.21 கோடி
  • S 400 பெட்ரோல் விலை ரூ.132 கோடி

(விலை புனே எக்ஸ-ஷோரூம் ஆகும்)

Recommended For You