மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஆட்டோமேட்டிக் விற்பனைக்கு வந்தது

மஹிந்திரா எக்ஸ்யூவி 500 காரின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வேரியண்ட் ரூ.15.64 லட்சத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. FWD மற்றும் AWD என இரண்டிலும் மொத்தம் 3 வேரியண்ட்கள் வந்துள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500

க்ரெட்டா ஆட்டோமேட்டிக் காருக்கு போட்டியாக மிக சவாலான விலையில் 3 விதமான ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலில் வந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை ஆட்டோமேட்டிக் மாடலும் பெறும்.

140பிஹெச்பி ஆற்றலை வழங்கும் 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் என்ஜின் பயன்படுத்தபட்டுள்ளது. இதன் டார்க் 330என்எம் ஆகும். இதில் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் 6 வேக மெனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கின்றது.

மெனுவல் கியர்பாக்ஸ் மாடலை விட 13 % மைலேஜ் குறைவாக எக்ஸ்யூவி500 ஆட்டோமேட்டிக் மைலேஜ் லிட்டருக்கு 13.85 கிமீ (ARAI) கிடைக்கும்.

சாங்யாங் டிவோலி காரில் பொருத்தப்பட்டிருக்கும் ஜப்பானிய ஏசின் செகீ  நிறுவனத்தின் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் ஸ்கார்ப்பியோ காரில் ஆஸ்திரேலியாவின் டிஎஸ்ஐ கியர்பாக்ஸ் பயன்படுத்தபட்டுள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஆட்டோமேட்டிக்

W8  மற்றும்  W10 டாப் வேரியண்டில் ஃபிரென்ட் வீல் டிரைவ் (FWD) மற்றும் ஆல் வீல் டிரைவ் (AWD) ஆப்ஷனிலும் வந்துள்ளது.  W10 டாப் வேரியண்டில் மெனுவல் வேரியண்டில் உள்ள அம்சங்களான 6 காற்றுப்பைகள் , சூரிய மேற்கூரை போன்றவற்றை பெற்றுள்ளது.

மஹிந்திரா நிறுவனம் ஆட்டோ கியர்பாக்ஸ்  மாடல்களுக்கு ரூ.58 கோடி முதலீடு செய்துள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஆட்டோமேட்டிக் விலை விபரம்

XUV500 W8 FWD : ரூ.15.64 லட்சம்

XUV500 W10 FWD : ரூ.16.49 லட்சம்

XUV500 10 AWD : ரூ.17.55 லட்சம்