Automobile Tamilan

மாருதி இக்னிஸ் வேரியன்ட்கள் – முழுவிபரம்

ஜனவரி 13ந் தேதி விற்பனைக்கு வரவுள்ள மாருதி இக்னிஸ் காரின் வேரியன்ட் மற்றும் இடம்பெற்றுள்ள வசதிகள் போன்றவற்றை தெரிந்துகொள்ளலாம். இக்னிஸ் காரின் விலை ரூ5.50 லட்சத்தில் தொடங்கலாம்.

இக்னிஸ் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் சிக்மா , டெல்டா ,ஜெட்டா மற்றும் ஆல்ஃபா என 4 விதமான வேரியன்டில் இரு என்ஜின்களிலும் தலா 6 வேரியன்ட்கள் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. டாப் வேரியன்ட் மாடலாக ஆல்ஃபா விளங்கும்.

இக்னிஸ் என்ஜின் விபரம்

இக்னிஸ் காரில் வழக்கம் போல மாருதி நிறுவனத்தின் ஆஸ்தான என்ஜினாக கருதப்படும் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டு அதிகபட்சமாக 75 ஹெச்பி பவருடன் , 190 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் (டெல்டா & ஜெட்டா) இடம்பெற்றுள்ளது.

பெட்ரோல் மாடலில்  1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டு அதிகபட்சமாக 83 ஹெச்பி பவருடன் , 113 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் (டெல்டா & ஜெட்டா) இடம்பெற்றுள்ளது.

பாதுகாப்பு அம்சங்கள்

அடிப்படையான பாதுகாப்பு அம்சங்களான ஏபிஎஸ் , இபிடி , முன்பக்க இரு காற்றுப்பைகள் ISOFIX  இருக்கைகள் , இருக்கை பட்டை போன்றவை அனைத்து வேரியன்டிலும் கிடைக்கும்.

[clickToTweet tweet=”மாருதி இக்னிஸ் காரில் பாதுகாப்பு அம்சங்களான ஏபிஎஸ் , இபிடி , இரு காற்றுப்பைகள்” quote=”மாருதி இக்னிஸ் காரில் பாதுகாப்பு அம்சங்களான ஏபிஎஸ் , இபிடி , இரு காற்றுப்பைகள்” theme=”style1″]

இக்னிஸ் வேரியன்ட் விளக்கம்

சிக்மா – தொடக்கநிலை வேரியண்டான சிக்மா ஏசி , 15 அங்குல ஸ்டீல் வீல் ,  ஏபிஎஸ் , இபிடி , முன்பக்க இரு காற்றுப்பைகள் ISOFIX  இருக்கைகள் , இருக்கை பட்டை மற்றும் முன்பக்க பவர் வின்டோஸ் போன்றவை இருக்கும்.

டெல்டா – சிக்மா வசதிகளுடன் 2டின் ஆடியோ சிஸ்டம் , ஓஆர்விஎம் டரன் இன்டிகேட்டர்கள் , பின்பக்க பவர் வின்டோஸ் , கீலெஸ் என்ட்ரி , பூளூடூத் மற்றும் யூஎஸ்பி வசதிகளுடன் கிடைக்கும்.

ஜெட்டா –  டெல்டா வசதிகளுடன் கிரில், ஹெட்லைட் மற்றும் பனி விளக்கு அறையை சுற்றி க்ரோம் பூச்சினை பெற்று , 15 அங்குல அலாய் வீல் , ரியர்வியூ சென்சார் , ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் பொத்தான் , ரியர் டிஃபோகர் , ரியர் வைபர் போன்றவற்றை கொண்டுள்ளது.

ஆல்ஃபா – ஜெட்டா வேரியன்டில் உள்ள வசதிகளுடன் கூடுதலாக எல்இடி புராஜெக்டர் ஹெட்லேம்ப், பகல் நேர எல்இடி ரன்னிங் விளக்குகள், ஸ்மார்ட் பிளே இன்ஃபோடெயின்மென்ட் வசதியுடன் ஆப்பிள் கார்பிளே, சுசூகி ரிமோட் ஆப், ரியர்வியூ கேமரா மற்றும் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் போன்ற வசதிகளுடன் கிடைக்கும்.

இக்னிஸ் கலர்கள்

இக்னிஸ் காரில் மொத்தம் 9 விதமான வண்ணங்களில் கிடைக்கின்றது. அவற்றில் மூன்று இரட்டை கலவை வண்ணங்களாகும். அவை நீல வண்ணத்துடன் கருப்பு கலவை , சிவப்பு நிறத்துடன் கருப்பு கலவை மற்றும்  நீல வண்ணத்துடன் வெள்ளை கலவை என இந்த மூன்று நிறங்களும் ஜெட்டா மற்றும் ஆல்ஃபா வேரியன்டில் மட்டுமே கிடைக்கும்.

வெள்ளை மற்றும் சில்வர் நிறங்கள் அனைத்து வேரியன்டிலும் கிடைக்கும். அர்பன் புளூ எனப்படும் நீல வண்ணம் சிக்மா வேரியன்ட் தவிர்த்து மற்றவற்றில் கிடைக்கும். டின்செல் நீலம் வண்ணம் ஜெட்டா மற்றும் டெல்டா வேரியன்ட்களில் மட்டும் கிடைக்கும். சிவப்பு நிறம்  ஜெட்டா மற்றும் டெல்டா வேரியன்ட்களில் மட்டும் கிடைக்கும்.

மாருதி இக்னிஸ் விலை

மாருதி இக்னிஸ் காரின் விலை ரூ. 5.50 லட்சத்தில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்பொழுது ரூ.11,000 செலுத்தி இக்னிஸ் காரினை நெக்ஸா டீலர்கள் வழியாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Exit mobile version