மாருதி செலிரியோ டீசல் விற்பனைக்கு வந்தது

மாருதி சுசூகி நிறுவனம் செலிரியோ காரில் டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட மாடலை ரூ.4.65 லட்சம் தொடக்க விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

மாருதி செலிரியோ

63 வருட வரலாற்றில் முதன்முறையாக சுசூகி நிறுவனத்தால் ரூ900 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ள DDiS 125 முத்திரையுடன் கூடிய புதிய 793சிசி டீசல் என்ஜின் 47பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். இதன் முறுக்குவிசை 125என்எம் ஆகும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.

செலிரியோ டீசல் என்ஜின் மைலேஜ் லிட்டருக்கு 27.62 கிமீ ஆகும். இதன் மூலம் இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் கார் என்ற பெருமையை செலிரியோ பெற்றுள்ளது.

செலிரியோ காரின் பெட்ரோல் மாடல் தோற்றம் மற்றும் உட்புறத்தில் எந்த மாற்றமும் இல்லை. செலிரியோ டீசல் மாடலில் மொத்தம் 3 வேரியண்ட்களும் ஆப்ஷனலாக ஒரு வேரியண்டும் கிடைக்கின்றது.

கீலெஸ் என்ட்ரி , சென்ட்ரல் லாக்கிங் வசதி , ஸ்டீரிங் வீலில் கட்டுப்பாடு பொத்தான்கள் , ஆடியோ பூளூடூத் தொடர்பு , ஆலாய் வீல்கள் போன்ற முக்கிய அம்சங்கள் உள்ளன.

மாருதி செலிரியோ டீசல்

இரட்டை காற்றுப்பைகள் , ஏபிஎஸ் மற்றும் இபிடி பிரேக்கிங் சிஸ்டம் , விபத்து ஏற்பட்டால் தானாக திறக்கும் கதவுகள் போன்ற பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

மெத்தம் 6 வண்ணங்களில் செலிரியோ கிடைக்கும். அவை சன்ஷன் கிரே , வெள்ளை , சன்ஷைன் ரே , ஆர்டிக் ஓயிட் , சில்வர் மற்றும் பூளூ ஆகும்.

கடந்த பிப்ரவரி 2014ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட செலிரியோ பெட்ரோல் மெனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸூடன் கிடைப்பதனால் இதுவரை 95,000 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

97 % அதிகமான பாகங்கள் இந்தியாவிலே உற்பத்தி செய்யப்படுகின்றது.

மாருதி செலிரியோ டீசல் விலை விபரம் (EX-showroom Delhi)

செலிரியோ LDi —  ரூ.4.65 லட்சம்

செலிரியோ VDi — ரூ.4.95 லட்சம்

செலிரியோ ZDi — ரூ.5.25 லட்சம்

செலிரியோ ZDi (O) — ரூ. 5.71 லட்சம்