மாருதி டிசையர் ஏஎம்டி விற்பனைக்கு வந்தது

ரூ. 8.46 லட்சத்தில் மாருதி சூசுகி டிசையர் காரின் ஏஎம்டி மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாருதி டிசையர் டீசல் ZDi வேரியண்டில் மட்டும் ஏஎம்டி மாடல் விற்பனைக்கு வந்துள்ளது.

மாருதி ஸ்விஃப்ட் டிசையர்

மாருதி சுசூகி நிறுவனத்தின் ஏஎம்டி கியர்பாக்ஸ் பெற்ற முதல் டீசல் மற்றும் செடான் காராக ஸ்விஃப்ட் டிசையர் விளங்குகின்றது. கடந்த ஒரு ஆண்டாக சோதனையில் இருந்த டிசையர் ஏஎம்டி தற்பொழுது விற்பனைக்கு வந்துள்ளது.

74bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 190Nm ஆகும். இதில் 5 வேக மெனுவல் மற்றும் ஏஎம்டி ஆப்ஷன் உள்ளது. டிசையர் ஏஎம்டி காரின் மைலேஜ் லிட்டருக்கு 26.59 கிமீ ஆகும்.

மாருதி-டிசையர்
மாருதி டிசையர் ஏஎம்டி

ZDi வேரியண்டில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆட்டோ கியர் ஷிஃப்ட் மாடலில் இரட்டை முன்பக்க காற்றுப்பைகள் , ஏபிஎஸ் மற்றும் இபிடி போன்ற அம்சங்கள் உள்ளன.

இரு பெடல்கள் மட்டும் கொண்டுள்ள ஏஜிஎஸ் நுட்பம் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான வசதியாகவும் , சவுகரியமாகவும் நகரங்களில் ஓட்ட சுலபமாக இருக்கும். சவாலான விலையில் , எரிபொருள் சிக்கனத்திலும் எந்த சமரசமும் செய்துகொள்ளமால் இருக்கின்றது.  செலிரியோ , ஆல்டோ கே10 மற்றும் வேகன்ஆர் கார்களை தொடர்ந்து டிசையர் டீசல் மாடலிலும் வந்துள்ளதை வாடிக்கையாளர்கள் ஏற்றுக்கொள்ளவார்கள் என நம்புகிறேன் என விளம்பரம் மற்றும் விற்பனை பிரிவு எக்ஸகூட்டிவ் Mr R S Kalsi தெரிவித்துள்ளார்.

மாருதி டிசையர் ஏஎம்டி விலை ரூ.8 .46 லட்சம் சென்னை எக்ஸ்ஷோரூம். டிசையர்  காரின் போட்டியாளர் டாடா ஸெஸ்ட் ஏஎம்டி ஆகும்.