மாருதி டிசையர் டூர் கார் விற்பனைக்கு அறிமுகம்

0

புதிய மாருதி டிசையர் டூர் கார் ரூபாய் 5.24 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் தலைமுறை மாருதி டிசையர் டூர் கார் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியன்டில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

2017 Maruti Swift Dzire Tour

Google News

மாருதி டிசையர் டூர்

  • பெட்ரோல் மற்றும் டீசல் மாருதி டிசையர் டூர் விற்பனைக்கு வெளியிடப்படுள்ளது.
  • மாருதி ஸ்விஃப்ட் டிசையர் டூர் தற்பொழுது மாருதி டிசையர் டூர் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.
  • இரண்டிலும் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

மாருதி சுசுகி நிறுவனத்தின் மாருதி ஸ்விஃப்ட் டிசையர் டூர் என அழைக்கப்பட்டு வந்த கார் தற்பொழுது ஸ்விஃப்ட் என்ற வார்த்தையை நீக்கிவிட்டு டிசையர் டூர் என்ற பெயரில் மட்டுமே வெளியடப்பட்டுள்ளது.

டிசையர் டூர் காரில் 1.2 லிட்டர் கே வரிசை பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதுதவிர டீசல் எஞ்சின் மாடலில் ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் டிடிஐஎஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. இரு மாடல்களிலும் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

New Maruti Swift Dzire Tour Interior

மிக குறைவான அடிப்படை வசதிகளை மட்டுமே பெற்றுள்ள டிசையர் டூர் காரில் வெளி தோற்ற அமைப்பில் சாதரண ஸ்டீல் வீல் , கருப்பு நிற பிளாஸ்டிக் கிரில் , கருப்பு நிற ஓஆர்விஎம் பெற்றிருப்பதுடன் உட்புறத்தில் பவர் வின்டோஸ் ,கருப்பு , பீஜ் நிறத்திலான டேஸ்போர்டினை பெற்று விளங்குகின்றது.

  • 2017 புதிய மாருதி ஸ்விஃப்ட் டிசையர் டூர் பெட்ரோல் விலை ரூ. 5.24 லட்சம்
  • 2017 புதிய மாருதி ஸ்விஃப்ட் டிசையர் டூர் டீசல் விலை ரூ. 5.99 லட்சம்

(டெல்லி எக்ஸ-ஷோரூம் விலை )

New Maruti Swift Dzire Tour Rear 1