மாருதி வேகன்ஆர் , ஸ்டிங்ரே ஏஎம்டி விற்பனைக்கு வந்தது

0
மாருதி வேகன் ஆர் மற்றும் மாருதி ஸ்டிங்ரே கார்களில் ஏஎம்டி மற்றும் முன்பக்க காற்றுப்பைகள் , ஏபிஎஸ் அனைத்து வேரியண்டிலும் ஆப்ஷனலாக இணைக்கப்பட்டுள்ளன.

மாருதி ஸ்டிங்ரே

பாதுகாப்பான கார்களை விற்பனை செய்யும் நோக்கில் ஏபிஎஸ் மற்றும் முன்பக்க இரட்டை காற்றுப்பைகள் பேஸ் வேரியண்ட் உட்பட வேகன் ஆர் மற்றும் ஸ்டிங்ரே  மாடல்களில் சேர்க்கப்பட்டுள்ளதாக மாருதி சுசூகி தெரிவித்துள்ளது.

தோற்றத்தில் எவ்விதமான மாற்றங்களும் இல்லாமல் வந்துள்ள இரண்டு மாடல்களுமே VXi வேரியண்டில் ஆட்டோ கியர் ஷிஃப்ட் கியர்பாக்சை பெற்றுள்ளது.

மாருதி ஸ்டிங்ரே

இரண்டிலும் 67பிஹெச்பி ஆற்றல் மற்றும் 90 என்எம் டார்க் வழங்கும் 1.0 லிட்டர் K வரிசை பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்சிலும் தற்பொழுது வந்துள்ள ஏஎம்டி மாடலிலும் கிடைக்கின்றது.

செலிரியோ மற்றும் ஆல்ட்டோ கே10 மாடல்களை தொடர்ந்து மூன்றாவது மாருதி காரின் மாடலாக வேகனார் மற்றும் ஸ்டிங்ரே ஏஎம்டி கியர்பாக்சினை பெற்றுள்ளது.

மாருதி வேகன்ஆர்

மாருதி வேகன்R விலை விபரம்

வேகன்ஆர் LXi – ரூ. 4.03 லட்சம்
வேகன்ஆர் LXi (O) – ரூ. 4.39 லட்சம்
வேகன்ஆர் LXi CNG – ரூ. 4.57 லட்சம்
வேகன்ஆர் VXi – ரூ. 4.28 லட்சம்
வேகன்ஆர் VXi (O) – ரூ. 4.64 லட்சம்
வேகன்ஆர் VXi AMT – ரூ. 4.76 லட்சம்
வேகன்ஆர் VXi AMT (O) – ரூ. 5.09 லட்சம்

மாருதி ஸ்டிங்ரே விலை விபரம்

ஸ்டிங்ரே LXi – ரூ. 4.22 லட்சம்
ஸ்டிங்ரே LXi (O) – ரூ. 4.58 லட்சம்
ஸ்டிங்ரே VXi – ரூ. 4.50 லட்சம்
ஸ்டிங்ரே VXi (O) – ரூ. 4.86 லட்சம்
ஸ்டிங்ரே VXi AMT – ரூ. 4.98 லட்சம்
ஸ்டிங்ரே VXi AMT (O) – ரூ. 5.31 லட்சம்

( அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை பட்டியல் )

வேகன் ஆர் :மாருதி வேகன்ஆர் மாடல் 2000ம் முதல் விற்பனையில் உள்ளது. வேகன்ஆர் மாடலில் தோற்ற மாற்றத்தை மட்டுமே கொண்ட மாடல் ஸ்டிங்ரே ஆகும். மாதம் சராசரியாக 13,000 கார்களை விற்பனை ஆகின்றது.

Maruti WagonR, Stingray AMT launched