மெர்சிடிஸ் மேபக் S600 கார்டு விற்பனைக்கு வந்தது

ரூ.10.50 கோடி விலையில் மெர்சிடிஸ் மேபக் S600 கார்டு குண்டு துளைக்காத பாதுகாப்பு  சொகுசு வாகனம் விற்பனைக்கு வந்துள்ளது. மேபக் எஸ்600 கார்டு கார் VR10 தரச்சான்றிதழை பெற்றுள்ளது.

mercedes-maybach-s600-gaurd

குண்டு துளைக்காத வகையில் மிக கடினமான ஸ்டீல் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள மெர்சிடிஸ் மேபக் S600 கார்டு சொகுசு காரில் 532 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் மிகவும் சக்திவாய்ந்த வி12 6.0 லிட்டர் டர்போ ட்வின் இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.  இதன் டார்க் 829.8 Nm ஆகும்.

0 முதல் 100 கிமீ வேகத்தினை வெறும் 5 விநாடிகளில் எட்டிவிடும். மெர்சிடிஸ் மேபக் S600 கார்டு காரின் உச்ச வேகம் மணிக்கு 250கிமீ என கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

சாதரன எஸ் கிளாஸ் கார் மாடலை விட சுமார் 207மிமீ கூடுதல் நீளத்துடன் உள்ள இந்த காரின் தோற்றம் எஸ் கிளாஸ் காரினை தழுவியே உள்ளது. மிக கடினமான ஸ்டீல் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ள பாடியினை பெற்றுள்ளது. மேலும் இதன் எரிபொருள் டேங்க் தீ பற்றாத வகையில் சிறப்பான பாதுகாப்பினை பெற்றுள்ளது.

Mercedes-S600-Guard-interior

உட்புறத்தில் மிக சிறப்பான இடவசதி மற்றும் பல நவீன வசதிகளை பெற்றுள்ள நிலையில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு சிறப்பான ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. 3டி பரமேஸ்டர் சரவுண்ட் சவூன்ட் சிஸ்டம் , IWC பேட்ஜ் கடிகாரம் போன்றவை உள்ளது. இரு எக்ஸ்கூட்டிவ் இருக்கைகள் மிக சவுகரியமான பல வசதிகளுடன் விளங்குகின்றது.

குண்டு துளைக்காத வகையிலும் , வெடி வைத்து தகர்த்தாலும் வாகனம் சேதமடையாத வகையில் பல சிறப்பு பாதுகாப்பு அம்சங்களை பெற்றுள்ளது.

மெர்சிடிஸ் மேபக் S600 கார்டு விலை ரூ.10.50 கோடி (டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை)