ரூ 7.38 லட்சத்தில் மாருதி சுசுகி எஸ்எக்ஸ4 2013 அறிமுகம்

0
மாருதி சுசுகி எஸ்எக்ஸ4 மேம்படுத்தப்பட்டு கார்  அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஸ்டைல் மற்றும் மைலேஜ் போன்றவற்றை மேம்படுத்தியுள்ளது.

மேம்படுத்தப்பட்ட எஸ்எக்ஸ்4 செடான் காரின் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தற்பொழுது மைலேஜ் லிட்டருக்கு 16.51 கிமீ கிடைக்கும். மேலும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின்(ஃபியட் மல்டிஜெட்) மைலேஜ் லிட்டருக்கும் 21.79 கிமீ கிடைக்கும். சிஎன்ஜி வகையில் 1 கிலோவிற்க்கு 22.1  கீமி கிடைக்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷனாக கிடைக்கும்.
Maruti SX4 2013
2013 மாருதி சுசுகி எஸ்எக்ஸ்4 மேம்படுத்தப்பட்ட காரின் மாற்றங்கள் முன்புற கிரில்,புதிய பம்பர், மேம்படுத்தப்பட்ட விளக்குகள்,இரண்டு வண்ணங்களில் இன்டிகேட் ஆகும் ஒஆர்விஎம். உட்புறத்தில் மேம்படுத்தப்பட்ட மல்டிமீடியா அமைப்பு, ஜிபிஎஸ் தொடுதிரை அமைப்பு, வாய்ஸ் கமென்ட் அமைப்பு, கார்டு ரென்டர் மற்றும் டேஸ்போர்டு கருப்பு நிறத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
எஸ்எக்ஸ்4 Vxi – ரூ 7.38 இலட்சம்
எஸ்எக்ஸ்4 Vxi CNG – ரூ 7.99 இலட்சம்
எஸ்எக்ஸ்4 VDI – ரூ 8.27 இலட்சம்
எஸ்எக்ஸ்4 Zxi – ரூ 8.24 இலட்சம்
எஸ்எக்ஸ்4 ZDI – ரூ 9. 22 இலட்சம்