ரெனோ க்விட் 1.0லி ஆகஸ்ட் 22 முதல்

0

வருகின்ற ஆகஸ்ட் 22ந் தேதி க்விட் காரின் கூடுதல் ஆற்றலை வழங்கும் ரெனோ க்விட் 1.0லி இஞ்ஜின் பொருத்தப்பட்ட மாடல்  விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. தற்பொழுது க்விட் 1.0 லிட்டர் இஞ்ஜின் மாடலுக்கு ரூ.10,000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

renault-kwid-1.0litre-shocased

Google News

ஆல்ட்டோ கே10 மற்றும் இயான் 1.0 லிட்டர் மாடல்களுடன் நேரடியான போட்டியை எதிர்கொள்ளும் வகையிலான 67.06 bhp ஆற்றல் மற்றும் 91 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் SCe பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றுள்ளது. இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. ரெனோ க்விட் 1.0லி மைலேஜ் லிட்டருக்கு 23.07 கிலோமீட்டர் ஆகும். க்விட் 800சிசி மைலேஜ் லிட்டருக்கு 25.07 கிமீ ஆகும்.

RXT மற்றும் RXT (O) என இரு வேரியண்ட்களில் மட்டுமே கிடைக்க உள்ள க்விட் 1.0 லி மாடல் வசதிகள் ஓட்டுனர் பக்க காற்றுப்பை , இன்ஃகோடெயின்மென்ட் சிஸ்டம் , டியூவல் டோன் டேஸ்போர்டு , பாடிகலர் பம்பர் , ரிமோட் கிலெஸ் என்ட்ரி , முன்பக்க கதவுகளுக்கு பவர் விண்டோஸ் மற்றும் 2ஸ்பிக்கர்கள் போன்ற வசதிகளை பெற்றிருக்கும்.

க்விட் 1.0லி தோற்ற அமைப்பில் எந்த மாற்றங்களும் இல்லாமல் 1.0 லிட்டர பேட்ஜ் மற்றும் ஸ்டிக்கரிங் பெற்றுள்ளது. க்விட் ஏஎம்டி மாடல் இந்த வருடத்தின் இறுதியில் விற்பனைக்கு வரலாம்.